Home /News /national /

வங்கக் கடலில் உருவாகியுள்ள ’உம்ஃபன்’ புயல் - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

வங்கக் கடலில் உருவாகியுள்ள ’உம்ஃபன்’ புயல் - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

புயல் மையம் கொண்டுள்ள பகுதி

புயல் மையம் கொண்டுள்ள பகுதி

புயலின் தாக்கமானது வடக்கு ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தின் கடலோர மாவட்டங்களில் இருக்கும் என்றும் சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
வங்கக் கடலில் புயல் உருவாகியுள்ளது என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தப் புயலுக்கு உம்ஃபன்என பெயரிடப்பட்டுள்ளது.

சென்னைக்கு தென்கிழக்கே சுமார் 650 கிமீ தொலைவில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது. இது மேலும் வலுவடைந்து அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக மாறி அதிதீவிர புயலாக மாறும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இது மேலும் வலுப்பெற்று அதிதீவிர சூறாவளிப் புயலாக மாறும் என்றும் நாளை வரை வடமேற்கு திசையில் நகர்ந்து பின்னர் திசையில் மாற்றம் பெற்று வடக்கு மற்றும் வட கிழக்கு திசையை நோக்கி நகரும் என்றும் சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

புயலின் தாக்கமானது வடக்கு ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தின் கடலோர மாவட்டங்களில் இருக்கும் என்றும் சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக புதுச்சேரி துறைமுகத்தில் புயல் தூர முன்னறிவிப்பு கொடி எண் 1 ஏற்றப்பட்டுள்ளது. இதன் காரணமாக கடுமையான சூறாவளிக் காற்று வீசும் என்பதால் மீனவா்கள் ஆழ்கடலுக்கு மீன் பிடிக்கச்  செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

வங்கக்கடலில் உருவாகவுள்ள புயலுக்கு உம்ஃபன் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் புயலுக்கான பெயரை தாய்லாந்து வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.






சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube




Also see:
Published by:Rizwan
First published:

Tags: Amphan Cyclone, Cyclone, Puducherry

அடுத்த செய்தி