Home /News /national /

நம்பிக்கை வாக்கெடுப்பு கோர விரும்புகிறீர்களா? அசோக் கெலாட் அரசுக்கு ஆளுநர் கேள்வி எழுப்பியதாக தகவல்

நம்பிக்கை வாக்கெடுப்பு கோர விரும்புகிறீர்களா? அசோக் கெலாட் அரசுக்கு ஆளுநர் கேள்வி எழுப்பியதாக தகவல்

ராஜஸ்தான் மாநில ஆளுநர் மற்றும் முதலமைச்சர்

ராஜஸ்தான் மாநில ஆளுநர் மற்றும் முதலமைச்சர்

சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோர விரும்புகிறீர்களா என ராஜஸ்தான் மாநில ஆளுநர், அம்மாநில அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

    ராஜஸ்தான் சட்டப்பேரவையை கூட்ட வலியுறுத்தி முதலமைச்சர் அசோக் கெலாட் 2-வது முறையாக ஆளுநரிடம் கடிதம் அளித்துள்ளார்.

    இதுதொடர்பாக மாநில அரசிடம் ஆளுநர் சில கேள்விகளை முன்வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா பெருந்தொற்றால் பேரவையை கூட்டுவது சிரமம் என்றும், 21 நாட்கள் நோட்டீஸ் கொடுக்க முடியுமா என்றும் ஆளுநர் வினவியுள்ளதாக கூறப்படுகிறது.

    Also read... சில நிமிடங்களில் கொரோனாவை கண்டறிய டெஸ்ட் கருவி - பரிசோதிக்க இந்தியா வருகிறது இஸ்ரேல் குழு

    நம்பிக்கை வாக்கெடுப்பு கோர உள்ளீர்களா என கேள்வி எழுப்பியுள்ள ஆளுநர், அதுகுறித்து கடிதத்தில் குறிப்பிடாமல் ஊடகங்களில் ஆளுங்கட்சியினர் பேசி வருவதாகவும் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: Rajastan

    அடுத்த செய்தி