Home /News /national /

மருந்து தயாரிப்பு நிறுவனத்தில் அமோனியா வாயு கசிவு.. 100க்கும் மேற்பட்ட பெண்கள் மருத்துவமனையில் அனுமதி

மருந்து தயாரிப்பு நிறுவனத்தில் அமோனியா வாயு கசிவு.. 100க்கும் மேற்பட்ட பெண்கள் மருத்துவமனையில் அனுமதி

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

அந்த நிறுவனத்தில் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் வேலை செய்து வருகின்ற நிலையில், அவர்களில் பலர் அமோனியா வாயுவை சுவாசித்ததால் மயக்கம் அடைந்தனர்.

    ஆந்திரப் பிரதேச மாநிலம் அனக்காப்பள்ளி அருகே உள்ள அட்சிதாராபுரத்தில் செயல்படும் தனியார் மருந்து தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து ஏற்பட்ட அமோனியா வாயு கசிவால்  100க்கும் மேற்பட்ட பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    அட்சிதாராபுரத்தில் செயல்படும் போரஸ் மருந்து தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து சற்றுமுன் அமோனியா வாயு கசிவு ஏற்பட்டது. அங்கிருந்து கசிந்த அமோனியா வாயு அந்த தொழிற்சாலை அருகில் செயல்பட்டு வரும் தனியார் ஆயத்த ஆடை நிறுவனத்திற்குள் புகுந்தது.

    அந்த நிறுவனத்தில் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் வேலை செய்து வருகின்ற நிலையில், அவர்களில் பலர் அமோனியா வாயுவை சுவாசித்ததால் மயக்கம் அடைந்தனர். இதைக் கண்டு பதறிப்போன மற்றவர்கள் அங்கிருந்து அலறியடித்துக் கொண்டு தொழில்சாலையில் இருந்து வெளியேறி சாலையில் ஓட்டம் பிடித்தனர்.

    இதனால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவத்தால் மயங்கி விழுந்த சக ஊழியர்களை மற்றவர்கள் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து நிர்வாகத்திற்கு தகவல் சென்ற நிலையில், நிர்வாகத்தினர் பாதிக்கப்பட்டவர்களை அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். இதையடுத்து மயக்கமடைந்த பல பெண்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இதையும் படிங்க: 3 மாதங்களுக்கு முன் திருமணமான வங்கி மேலாளர் பயங்கரவாதிகளால் கொலை - காஷ்மீரில் தொடரும் சோகம்

    தகவல் அறிந்த வருவாய் துறை அதிகாரிகள், சுகாதாரத்துறை அதிகாரிகள் , காவல்துறையினர், தீயணைப்பு படையினர் ஆகியோர் அங்கு விரைந்து சென்று நிலைமையை கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில் அமோனியா வாயு கசிவு நிறுத்தப்பட்டு தற்போது நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

    செய்தியாளர் : புஷ்பராஜ், ஆந்திர பிரதேசம்
    Published by:Kannan V
    First published:

    Tags: Andhra Pradesh

    அடுத்த செய்தி