Home /News /national /

சொந்த மாநிலமான குஜராத்துக்கு துரோகம் செய்யும் அமித் ஷா - சித்தராமையா கடும் விமர்சனம்

சொந்த மாநிலமான குஜராத்துக்கு துரோகம் செய்யும் அமித் ஷா - சித்தராமையா கடும் விமர்சனம்

சொந்த மாநிலமான குஜராத்துக்கு துரோகம் செய்யும் அமித் ஷா - சித்தராமையா கடும் விமர்சனம்

சொந்த மாநிலமான குஜராத்துக்கு துரோகம் செய்யும் அமித் ஷா - சித்தராமையா கடும் விமர்சனம்

அமித் ஷாவின் இந்த கருத்துக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினினும் ட்விட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இந்தி மொழி தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறிய கருத்துக்கு கர்நாடகா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களின் தலைவர்கள் கடும் கண்டத்தை தெரிவித்துள்ளனர்.

    37ஆவது நாடாளுமன்ற அலுவல் மொழிக்கான கூட்டம் நேற்று முன்தினம் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் நடைபெற்றது. இதில் பேசிய அமித் ஷா, நாட்டின் இணைப்புக்கான மொழியாக ஆங்கிலம் செயல்படும் நிலையில், ஆங்கிலத்துடன் இந்தியையும் இணைப்பு மொழியாக மக்கள் ஏற்க வேண்டும்.மாநில மொழிகளை அப்படி ஏற்க இயலாது எனத் தெரிவித்தார்.

    திரிணாமுல் காங்கிரஸ் எதிர்ப்பு

    அமித் ஷாவின் இந்த கருத்து பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு எதிர்க்கட்சிகள், மாநில கட்சிகள் அமித் ஷாவின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்துவருகின்றன. மேற்கு வங்கத்தை சேர்ந்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சி இது குறித்து கூறுகையில், "இந்தி இந்தியாவின் தேசிய மொழி அல்ல. அமித் ஷாவும் பாஜகவும் இந்தி பேசாத மாநிலங்களில் இந்தியை திணித்தால் அதை கடுமையாக எதிர்ப்போம்.

    இதையும் படிங்க - டெல்லியில் மீண்டும் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு!

    இந்தியா பன்முகத்தன்மை வாய்ந்த மக்கள் வாழும் நாடாகும். இங்கு ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம் என்ற பாஜக கொள்கை எடுபடாது. பாசிசம் இதுபோலத்தான் செயல்படும். அரசியல் சாசனத்தின் அடிப்படைக்கு மாறாக பாஜக அரசு செயல்படுகிறது. இந்தித் திணிப்பு என்பது கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது" என காட்டமாக விமர்சித்துள்ளது.

    சித்தராமையா கண்டனம்

    காங்கிரஸ் மூத்த தலைவரும், கர்நாடகா முன்னாள் முதலமைச்சருமான சித்தராமையாவும் அமித் ஷாவின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். அவர், "ஒரு கன்னடராக அமித் ஷா கூறிய கருத்தை கடுமையாக எதிர்க்கிறேன். இந்தி இந்தியாவின் தேசிய மொழி அல்ல.அவ்வாறு நிகழ நாங்கள் அனுமதிக்க மாட்டோம். கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரான பாஜகவின் பார்வை மாற வேண்டும். இதுபோன்ற பார்வை போலி தேசியவாதிகளான சாவர்க்கரின் பார்வையாகும். குஜராத்தில் பிறந்த அமித் ஷா தனது சொந்த மாநிலத்திற்கும், தாய் மொழியான குஜராத்திக்கும் துரோகம் செய்யும் விதமாக நடந்துகொள்ளவது மோசமானது" என கடுமையாக சாடியுள்ளார்.

    அமித் ஷாவின் இந்த கருத்துக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினினும் ட்விட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளார். ஒரே தவறை திரும்ப திரும்ப செய்யும் பாஜகவின் முயற்சி வெற்றி பெறாது என ஸ்டாலின் கூறியுள்ளார்.
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Amit Shah, Imposing Hindi, Siddaramaiah

    அடுத்த செய்தி