இந்தியை திணிக்க வேண்டும் என்று எப்போதும் சொன்னதில்லை - அமித்ஷா!

இந்தி மொழி பயன்பாட்டை அதிகரிக்கவேண்டும் என்று இந்தி தினத்தன்று அமித்ஷா கருத்து தெரிவித்திருந்தார்.

news18
Updated: September 18, 2019, 6:25 PM IST
இந்தியை திணிக்க வேண்டும் என்று எப்போதும் சொன்னதில்லை - அமித்ஷா!
அமித்ஷா
news18
Updated: September 18, 2019, 6:25 PM IST
இந்தி மொழியை திணிக்கவேண்டும் என்று நான் எப்போதும் கூறியதில்லை என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம் அளித்துள்ளார். 

உலக அரங்கில் இந்தியாவை அடையாளப்படுத்தும் விதமாக ஒரு மொழி தேவை. இந்தி மொழியை அதிக மக்கள் பயன்படுத்துவதால் அதையே உலக அரங்கில் இந்தியாவின் அடையாளமாக வெளிப்படுத்தவேண்டும். அனைவரும் இந்தி மொழி பயன்பாட்டை அதிகரிக்கவேண்டும் என்று இந்தி தினத்தன்று அமித்ஷா கருத்து தெரிவித்திருந்தார். அவருடைய பேச்சு தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களிலிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது.

இந்தநிலையில், ஜார்கண்டில் செய்தியாளர்களிடம் பேசிய அமித்ஷா, ’இந்தியை திணிக்க வேண்டும் என்று நான் எப்போதும் சொன்னதில்லை. என் பேச்சை அரசியலாக்க நினைப்பவர்கள் கூர்ந்து கவனிக்க வேண்டும். மாநில் மொழிகளுக்குப் பிறகு இரண்டாவது மொழியாக இந்தியை கற்க வேண்டும் என்றே கூறினேன். இந்தி பேசாத மாநிலத்தைச் சேர்ந்த எனக்கும் இந்தி இரண்டாவது மொழிதான்’ என்று விளக்கம் அளித்தார்.


Also see:
First published: September 18, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...