• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • மோடி அரசை விமர்சிக்க பயமாக இருக்கிறது! ராகுல் பஜாஜ் விமர்சனத்துக்கு பதிலளித்த அமித்ஷா

மோடி அரசை விமர்சிக்க பயமாக இருக்கிறது! ராகுல் பஜாஜ் விமர்சனத்துக்கு பதிலளித்த அமித்ஷா

ராகுல் பஜாஜ்

ராகுல் பஜாஜ்

  • News18
  • Last Updated :
  • Share this:
    மோடி அரசை விமர்சிக்க தொழிலதிபர்கள் பயப்படுவதாக ராகுல் பஜாஜ் தெரிவித்த கருத்துக்கு, யாரும் பயப்படத் தேவையில்லை என்று அமித்ஷா பதிலளித்தார்.

    எக்னாமிக் டைம்ஸ் நாளிதழ் ஒருங்கிணைத்த விருது வழங்கும் விழா நேற்று மும்பையில் நடந்தது. இந்த நிகழ்வில் அமைச்சர்கள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் தொழிலதிபர்கள் பலரும் கலந்து கொண்டனர். மும்பையில் நடைபெற்ற விழாவில் பேசிய பஜாஜ் நிறுவனத் தலைவர் ராகுல் பஜாஜ், ’ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் ஆட்சியின்போது யாரை வேண்டுமானாலும் விமர்சிக்கும் சுதந்திரம் இருந்தது என்றும் தற்போது அப்படி விமர்சித்தால் அதனை ஆட்சியாளர்கள் ஏற்றுக் கொள்வார்களா என்கிற பயம் இருப்பதாகவும் கூறினார்.

    தொடர்ந்து பேசிய அவர், கும்பல் கொலைகள் சகிப்பின்மை சூழலை உண்டாக்குகிறது. எங்களுக்கு அச்சமாக இருக்கிறது. சில விஷயங்களைப் பேச விரும்பவில்லை. ஆனால், கும்பல் கொலைகள் தொடர்பாக யாரும் தண்டிக்கப்படவில்லை’ என்று வேதனை தெரிவித்தார். அதே மேடையிலேயே அதற்கு பதிலளித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, யாரும் பயப்படத் தேவையில்லை. எங்களுக்கு எதிரான செய்திகள் தான் அதிகமாக வந்துகொண்டிருக்கின்றன என்றும், எங்கள் விமர்சிப்பதற்கு அச்சமான ஒரு சூழல் இருந்தால், அதை மாற்ற வேண்டியது அவசியம் என்றும் கூறினார்.

    Also see:


     

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: