ஜெயா பச்சனின் சொத்து மதிப்பு ரூ. 1,000 கோடி

DS Gopinath | news18
Updated: March 22, 2018, 4:54 PM IST
ஜெயா பச்சனின் சொத்து மதிப்பு ரூ. 1,000 கோடி
அமிதாப் பச்சன் மற்றும் அவரது மனைவி ஜெயா பச்சன்
DS Gopinath | news18
Updated: March 22, 2018, 4:54 PM IST
பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் மற்றும் அவரது  மனைவி ஜெயா பச்சன் ஆகியோரின் சொத்து மதிப்பு ரூ. 1,000 கோடி என தெரியவந்துள்ளது.

உத்திரப் பிரதேசத்திலிருந்து சமாஜவாதி கட்சி சார்பில்  ராஜ்யசபா எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஜெயா பச்சன். இவரது பதவிக்காலம் நிறைவடையவுள்ள நிலையில், காலியாகும் பதவிகளுக்கான தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனிடையே, ஜெயா பச்சனை சமாஜ்வாதி கட்சி மீண்டும் ராஜ்யசபா எம்.பி. வேட்பாளராக அறிவித்துள்ளது.

இந்நிலையில், ஜெயா பச்சன் தனது சொத்து விவரங்கள் குறித்து தேர்தலுக்கான வேட்பு மனுவில் தெரிவித்துள்ளதாவது:

ஜெயா பச்சன் மற்றும் அவரது கணவர் அமிதாப் பச்சனுக்கு சொந்தமான அசையா சொத்துகளின் மதிப்பு ரூ. 460 கோடியாகும். (கடந்த 2012-இல் அசையா சொத்துகளின் மதிப்பு ரூ. 152 கோடியாக இருந்தது)

பச்சன் தம்பதியின் அசையும் சொத்துகளின் மதிப்பு ரூ. 540 கோடியாகும். (கடந்த 2012-இல் இவற்றின் மதிப்பு ரூ. 343 கோடியாக இருந்தது).

ஜெயா பச்சன், அமிதாப் பச்சனுக்கு ஆகியோருக்கு சொந்தமான தங்கம் மற்றும் இதர நகைகளின் மதிப்பு ரூ. 62 கோடியாகும். இதில் அமிதாப் பச்சனுக்கு சொந்தமான நகைகளின் மதிப்பு மட்டும் ரூ. 36 கோடி.

இருவருக்கும் சொந்தமாக ரோல்ஸ் ராய்ஸ், மெர்சிடஸ், ரேஞ்ச் ரோவர் கார் உள்ளிட்ட 12 வாகனங்கள் உள்ளன. இவற்றின் மதிப்பு  சுமார் ரூ. 13 கோடி. அமிதாப் பச்சன் மற்றும் ஜெயா பச்சனுக்கு சொந்தமான கைக் கடிகாரங்களின் மதிப்பு முறையே ரூ. 3.54 கோடி, ரூ. 51 லட்சம் ஆகும். ரூ. 9 லட்சம் மதிப்பிலான பேனா ஒன்றை அமிதாப் பச்சன் வைத்துள்ளார்.
Loading...
மேலும், இத்தம்பதிக்கு விவசாய நிலங்களும், நொய்டா, போபால், காந்திநகர் உள்ளிட்ட இடங்களில் சொத்துகளும், ஃபிரான்ஸ் நாட்டில் வீடு ஒன்றும் உள்ளது என ஜெயா பச்சன் அந்த வேட்பு மனுவில் தெரிவித்துள்ளார்.

இதன்மூலம் ஜெயா பச்சன் மற்றும் அவரது கணவரின் சொத்து மதிப்பு ரூ. 1,000 கோடி என தெரியவந்துள்ளது. (கடந்த 2012-இல் இவர்களின் சொத்து மதிப்பு ரூ. 493 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது). கடந்த 2014-இல் நடைபெற்ற ராஜ்யசபா தேர்தலில் பா.ஜ.க. சார்பில் போட்டியிட்ட ரவீந்திர கிஷோர் சின்ஹா தனது சொத்து மதிப்பு ரூ. 800 கோடி என தெரிவித்திருந்தார். இந்நிலையில், ஜெயா பச்சன் இதை முறியடித்து ராஜ்யசபாவின் பணக்கார எம்.பி. என்னும் பெருமையை பெறவுள்ளார்.
First published: March 13, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்