உடனே வேண்டும்... ப்ளீஸ்...! மழைக்காக அமிதாப் பச்சன் ட்வீட்

”அமிதாப் சார்.. இந்த செய்தி உண்மையில்லை” என்றும், மழையை ஏற்படுத்தும்  சோதனையை செய்யவில்லை என்றும், அது வெறும் நாசா ஏவுதள மையத்தில் நடந்த பரிசோதனையின் போது புகை உண்டாவதையும், பின்னர் மழை எவ்வாறு பெய்தது என்றும் சில செய்தி நிறுவனமும் அமிதாப்பின் ட்வீட்டுக்கு பதில் அளித்துள்ளது

Web Desk | news18
Updated: June 28, 2019, 3:21 PM IST
உடனே வேண்டும்... ப்ளீஸ்...! மழைக்காக அமிதாப் பச்சன் ட்வீட்
அமிதாப் பச்சன்
Web Desk | news18
Updated: June 28, 2019, 3:21 PM IST

நவீன முறையில் செயற்கையாக மழையை உண்டாகும்  எந்திரம் என்று இணையத்தில் சுற்றும் போலி வீடியோவை, நடிகர் அமிதாப் பச்சன் ட்வீட் செய்து இந்தத் திட்டத்தை இந்தியாவிற்கு கொண்டு வாருங்கள், உடனே நடைமுறைப்படுத்துங்கள் என்று பதிவு செய்தார்.


தமிழகம் மட்டுமில்லை, இந்தியாவே மழைக்காகவும், தண்ணீருக்காகவும் வறட்சியால் போராடிக் கொண்டிருக்கிறது.இந்நிலையில், மழை மேகங்களை உருவாக்கும் எந்திரம் என்று இணையத்தில் ஒரு வீடியோ வைரலாக பரவியது.


பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், அந்த வீடியோவை கண்டு ஆச்சர்யமாகி, ”இந்த திட்டம் உடனே இந்தியாவிற்கு தேவை எனவும், உடனே தேவை எனவும்” என்று, அந்த வீடியோவை தன் ட்விட்டர் பக்கத்தில் இணைத்து  பதிவு செய்தார்.


உடனே, அதற்கு சில நெட்டிசன்கள் பாராட்டினாலும், பலர் இந்த வீடியோ பதிவில் உண்மையில்லை என்றும், அந்த வீடியோ அமெரிக்காவில் உள்ள நாசா ராக்கெட் ஏவுதள மையத்தில் எடுக்கப்பட்டது என்றும், அதிநவீன ஆர்.எஸ்.25 என்ற இயந்திரத்தில் இருந்து புகைமூட்டம் வெளியானது, அது மழை வரவழைக்கும் இயந்திரம் இல்லை என்றும் பதிவிட்டிருந்தனர்.


”அமிதாப் சார்.. இந்த செய்தி உண்மையில்லை” என்றும், மழையை ஏற்படுத்தும்  சோதனையை செய்யவில்லை என்றும் சில செய்தி நிறுவனமும் அமிதாப்பின் ட்வீட்டுக்கு பதில் அளித்துள்ளது

இந்திய மக்கள் வறட்சியாலும், அதனால் தண்ணீர் பஞ்சத்தாலும் பாதிக்கப்படுவதை உணர்ந்துள்ள அமிதாப் பச்சன் அதற்கான தீர்வை தேடுவதில் ஆர்வமாக இருப்பதை இந்த சம்பவம் உணர்த்துகிறது.

Also watch: காப்பியடித்து மாட்டிக்கொண்ட இசையமைப்பாளர்கள்!
First published: June 28, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...