தண்ணீரை எப்படி பாதுகாக்க வேண்டும் என்பதற்கான உதாரணத்தை நாம் ஏற்படுத்த வேண்டும் என்று நியூஸ்18 குழுமத்தின் மிஷன் பானி விழிப்புணர்வு நிகழ்ச்சியில் அமிதாப் பச்சன் தெரிவித்துள்ளார்.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டத்தின் அளவு குறைந்துவருவதாக கடந்த வருடம் நிதி ஆயோக் அமைப்பு எச்சரிக்கைவிடுத்திருந்தது. இந்தநிலையில், நியூஸ்18 குழுமம் மிஷன் பானி என்ற பெயரில் நாடு முழுவதும் விழிப்புணர்வு முகாமை முன்னெடுத்துவருகிறது.
மிஷன் பானி விழிப்புணர்வு நிகழ்ச்சியின் தொடக்க விழா இன்று நடைபெற்றது. இந்தநிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், மத்திய அமைச்சர் நிதின் கட்கரி ஆகியோர் கலந்துகொண்டனர். அந்த நிகழ்வில் பேசிய அமிதாப் பச்சன், ‘தண்ணீர் இல்லாமல் போனால் என்ன ஆகும்? அதுபோன்ற உதாரணங்களை நாம் காட்ட வேண்டும்? அதேபோல, தண்ணீரைப் பாதுகாப்பது செய்யப்பட்டது என்பதை காட்ட வேண்டும்.
ஒவ்வொரு தனிப்பட்ட நபரும் தண்ணீர் பாதுகாப்புக்கு ஏதாவது செய்ய வேண்டும். போலியோ இல்லாத இந்தியா உருவாதத்ற்கு 8 ஆண்டுகள் தேவைப்பட்டது. அது எளிமையான செயலாக இல்லை. ஏதோ ஒரு இடத்தில் தண்ணீரை சேமிக்கவேண்டும்’ என்று தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து பேசிய நிதின் கட்கரி, ‘பேருந்துகள் மற்றும் லாரிகளை உயிரி வாயுக்கு மாற்றிவருகிறோம். கடலை ஒட்டிய பகுதிகளில் வசிப்பவர்கள் கடலில் குப்பைகளைக் கொட்டினால் என்னவாகும் என்று யோசித்துப் பாருங்கள்’ என்று தெரிவித்தார்.
Also see:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Mission Paani, Save Water