• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • நாட்டு மக்களுக்கு ஒரே அடையாள அட்டை - அமித்ஷாவின் அடுத்த யோசனை

நாட்டு மக்களுக்கு ஒரே அடையாள அட்டை - அமித்ஷாவின் அடுத்த யோசனை

அமித்ஷா

அமித்ஷா

  • News18
  • Last Updated :
  • Share this:
    நாட்டு மக்களுக்கு ஆதார், ஓட்டுநர் உரிமம், வங்கிக்கணக்குகள், நிரந்தர கணக்கு எண் ஆகிய அனைத்து விவரங்களையும் உள்ளடக்கிய குடியுரிமை அட்டையை வழங்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வலியுறுத்தியுள்ளார்.

    நாட்டில் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணிகள், 2021-ம் ஆண்டில் மேற்கொள்ளப்பட உள்ளன. இதற்கான தலைமை அலுவலக கட்டுமானப் பணியை டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அடிக்கல் நாட்டி தொடங்கிவைத்தார்.

    நிகழ்ச்சியில் பேசிய அமித் ஷா, மக்கள் தொகை கணக்கெடுப்பு மூலம் மனிதவளம், பொது மக்களின் நிலை, கலாச்சாரம், பொருளாதார நிலவரம் ஆகியவற்றை அறிய முடிவதாகவும், இதனை அறிவியல் பூர்வமான முறையில் மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

    மேலும் 2021-ம் ஆண்டில் மேற்கொள்ளப்பட உள்ள மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணிகள் மொபைல் செயலி மூலம் மேற்கொள்ளப்பட உள்ளதாக கூறினார். ஒருவர் உயிரிழக்கும் போது அதுகுறித்த தகவல்களை தானாகவே சேர்க்கும் வகையிலான வழிமுறையை உருவாக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

    இதேபோல் ஆதார், பாஸ்போர்ட், வங்கிக்கணக்குகள், ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை ஆகிய அனைத்து தகவல்களையும் உள்ளடக்கிய குடியுரிமை அட்டையை நாட்டு மக்களுக்கு வழங்க வேண்டும் என்று வலியுறுத்திய அமித் ஷா, இதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறினார். அடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணிகள் மற்றும் தேசிய குடியுரிமை பதிவேடு தயாரிக்கும் பணிகள் 12,000 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்பட இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

    2011-ம் ஆண்டில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, நாட்டின் மக்கள் தொகை எண்ணிக்கை 121 கோடியாக உள்ளது. 16-வது முறையாக 2021-ம் ஆண்டு மார்ச் 1-ம் தேதியை அடிப்படையாகக் கொண்டு இரண்டு கட்டங்களாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட உள்ளது.

    Also watch

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Prabhu Venkat
    First published: