Home /News /national /

புதுச்சேரிக்கு வருகை தந்த மத்திய அமைச்சர் அமித்ஷா.. வரவேற்ற ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்

புதுச்சேரிக்கு வருகை தந்த மத்திய அமைச்சர் அமித்ஷா.. வரவேற்ற ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா

Amit Shah Visit To Pondicherry | பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள புதுச்சேரி வந்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் புதுச்சேரி விமான நிலையத்தில் வரவேற்றார்.

புதுச்சேரியில் உள்ள மகாகவி பாரதியார் இல்லத்திற்கு சென்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அங்கு உள்ள பாரதியார் படத்திற்கு மரியாதை செய்தார்.

புதுச்சேரிக்கு ஒரு நாள் சுற்றுப்பயணமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று வருகை தந்துள்ளார். புதுச்சேரி வந்த அவரை துணைநிலை ஆளுநர் தமிழிசை, முதலமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள் நமச்சிவாயம், லட்சுமிநாராயணன், தேனீ ஜெயக்குமார், சாய் சரவணன்குமார், சந்திரபிரியங்கா, பாஜக மாநில தலைவர் சாமிநாதன், எம்எல்ஏக்கள், பாஜக பிரமுகர்கள் சால்வை அணிவித்தும், பூங்கொத்து அளித்தும் வரவேற்றனர்.

புதுச்சேரி விமான நிலையத்தில், பாஜக தொண்டர்கள் நூற்றுக்கணக்கானவர்கள் உற்சாகத்தோடும், ஆரவாரத்தோடும் அமித்ஷாவை வரவேற்றனர். மலர்களை தூவி அமித் ஷாவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

அமித்ஷாவை வரவேற்ற ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்


பின்னர் மத்திய அமைச்சர் அமித்ஷா ஈஸ்வரன் கோவில் வீதியில் உள்ள மகாகவி பாரதியார் நினைவு இல்லத்திற்கு வந்து அவரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து புதுச்சேரி மகாகவி பாரதியார் நினைவு இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள பார்வையாளர் பதிவேட்டில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கையெழுத்திட்டார்.

 

 



 

பின்னர் அங்கிருந்து அரவிந்தர் ஆசிரமத்துக்கு வந்தார். மத்திய அமைச்சர் அமித்ஷாவை ஆசிரம நிர்வாகிகள் வரவேற்றனர். அங்கு மகான் அரவிந்தர், அன்னை மிர்ரா ஆகியோரின் சமாதியில் மலர் வைத்து அமித்ஷா அஞ்சலி செலுத்தினார். பின்னர் மகான் அரவிந்தர், அன்னை ஆகியோரின் அறையை பார்வையிட்டார்.  புதுவைக்கு வந்த அமித்ஷாவை வரவேற்கும் விதமாக பிரம்மாண்ட அலங்கார வளைவுகள், கொடி, தோரணங்கள், பேனர்கள் வைக்கப்பட்டிருந்தது.

 

 



 

 

மத்திய அமைச்சர் வருகையையொட்டி நகர் முழுவதும் போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அவர் செல்லும் வழியெங்கும் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தர். புதுச்சேரி முழுவதும் மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
Published by:Sankaravadivoo G
First published:

Tags: Amit Shah, BJP, Puducherry, Tamilisai Soundararajan

அடுத்த செய்தி