ஹோம் /நியூஸ் /இந்தியா /

பூதாகரமாகும் எல்லை பிரச்சனை.. கர்நாடக - மகாராஷ்டிரா முதலமைச்சர்களை சந்திக்கும் அமித் ஷா

பூதாகரமாகும் எல்லை பிரச்சனை.. கர்நாடக - மகாராஷ்டிரா முதலமைச்சர்களை சந்திக்கும் அமித் ஷா

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா

எல்லை பிரச்னை தொடர்பாக மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை ஆகிய இருவரையும் வரும் டிசம்பர் 14ஆம் தேதி அமித் ஷா சந்திக்கிறார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Delhi, India

கர்நாடக-மகாராஷ்டிரா மாநில எல்லை பிரச்னை தொடர்பாக இரு மாநில முதலமைச்சர்களையும் அமித் ஷா சந்திக்கவுள்ளார். கர்நாடக மற்றும் மகாராஷ்டிரா ஆகிய இரு மாநிலங்களிலும் பாஜக மற்றும் அதன் கூட்டணி ஆட்சி உள்ளது. கர்நாடகாவில் முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தலைமையில் கூட்டணி ஆட்சியும் மகாராஷ்டிராவில் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் பாஜக கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது.

இந்த இரு மாநிலங்கள் மத்தியில் நீண்ட காலமாக எல்லை பிரச்சனை இருந்து வரும் நிலையில், இது பூதாகரமாக மாறியுள்ளது.கர்நாடக எல்லைப் பகுதியில் உள்ள பெலகாவி, பீதர், கார்வார் ஆகிய மாவட்டங்களில் சுமார் 800க்கும் மேற்பட்ட கிராமங்களில் மராத்தி மொழி பேசும் மக்கள் அதிகமாக உள்ளனர். இந்த மாவட்டங்களை மகாராஷ்டிராவில் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக உள்ளது. இதற்கு கர்நாடக மாநிலத்தில் கடும் எதிர்ப்பு உள்ளது.

இந்த பூசலுக்கு வலு சேர்க்கும் விதமாக மகாராஷ்டிரா மாநில அமைச்சர்கள் கர்நாடகாவில் உள்ள எல்லை கிராமங்களை ஆய்வு செய்யவுள்ளதாக தகவல் வெளியாகின. இதற்கு கர்நாடக மாநில அரசு கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளது. குறிப்பாக, மகாராஷ்டிரா அமைச்சர்கள் கர்நாடகாவுக்குள் நுழைந்தால் கைது செய்யப்படுவார்கள் என முதலமைச்சர் பசவராஜ் பொம்மை எச்சரித்துள்ளார்.

இந்த பூசல் தொடர்பாக கர்நாடக அமைப்பினர் எல்லையில் போராட்டம் ஆர்ப்பாட்டங்களையும் நடத்திய நிலையில் சில இடங்களில் வாகனங்கள் சூறையாடப்பட்டன.விவகாரம் பூதாகரமானதால் இரு மாநில எல்லைகளிலும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.இந்த பிரச்சனைக்கு சமூக தீர்வு வேண்டும் என்ற கோரிக்கையுடன் மகாராஷ்டிரா எதிர்க்கட்சி கூட்டணியான மகாவிகாஸ் அகதி கூட்டணி உறுப்பினர்கள் டெல்லியில் மத்திய அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தனர்.

இதையும் படிங்க: 5 மாநில இடைத்தேர்தல் முடிவுகள் முழு விவரம்- முலாயம் தொகுதியை கைப்பற்றினார் மருமகள் டிம்பிள்!

தற்போதைய பூசல் இரு மாநிலங்களில் இடையே பெரும் வன்முறையாக மாறும் என்று அமித் ஷாவிடம் எச்சரித்த மகாராஷ்டிரா எதிர்க்கட்சிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க கோரினர். பிரச்சனைக்கு சமூக தீர்வு காணப்படும் என உறுதி அளித்த அமித் ஷா, இந்த விவகாரம் தொடர்பாக மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை ஆகிய இருவரையும் வரும் டிசம்பர் 14ஆம் தேதி சந்திப்பேன் என்று தெரிவித்துள்ளார்.

First published:

Tags: Amit Shah, Home Minister Amit shah, Karnataka, Maharashtra