உத்தரப்பிரதேசத்தின் அயோத்தியில் ராமர் கோயில் கட்ட கடந்த 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் தேதி பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இதை தொடர்ந்து, ராமர் கோயில் கட்டுவதற்கு ராம ஜென்ம பூமி அறக்கட்டளை உருவாக்கப்பட்டு அதன் மூலம் கட்டுமானப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. பலரும் இந்த ராமர் கோவிலுக்கு பலரும் தங்களால் முடிந்த நிதியை வழங்கியுள்ளனர்.
இந்நிலையில், திரிபுராவில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அடுத்த ஆண்டு 2024 ஜனவரி மாதம் 1ஆம் தேதி அயோத்தி ராமர் கோயில் திறக்கப்படும் என்று கூறினார். 2024ஆம் ஆண்டு ஜனவரிக்குள் கட்டுமான பணிகள் முழுமையாக நடைபெற்று சங்கராந்தி பண்டிகை காலத்தில் கோயிலை திறந்து ஜனவரி 14 ஆம் தேதி ராமர் சிலைகள் நிறுவப்படும் என திட்டமிடப்பட்டிருந்த நிலையில் அமித்ஷா இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.
ரூ.1,800 கோடி மதிப்பீட்டில் தயாராகும் இந்த பிரம்மாண்ட கோயில் கட்டுமானத்தில் நூற்றுக் கணக்கான தொழிலாளர்கள் அன்றாடம் வேலை செய்து வருகின்றனர்.கோயில் வளாகத்தில் பிரத்தியேக காவல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அயோத்தி பிரச்சனையை பாஜக நீண்ட காலமாக முன்னிலைப்படுத்தி வருகிறது, மேலும் பக்தர்களுக்காக கோவில் திறக்கப்படுவது இந்துக்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த ஆண்டு, மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ராமர் கோயில் திறப்பு குறித்த அறிவிப்பு அரசியல் தளத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Amit Shah, Ayodhya, Ayodhya Ram Temple