தெலங்கானாவில் அனைத்து தொகுதியிலும் பாஜக போட்டியிடும் - அமித்ஷா அறிவிப்பு

news18
Updated: September 15, 2018, 4:05 PM IST
தெலங்கானாவில் அனைத்து தொகுதியிலும் பாஜக போட்டியிடும் - அமித்ஷா அறிவிப்பு
அமித் ஷா.
news18
Updated: September 15, 2018, 4:05 PM IST
தெலங்கானாவில் நடக்க உள்ள சட்டசபை தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் பாஜக போட்டியிடும் என அக்கட்சி தலைவர் அமித்ஷா கூறியுள்ளார்.

ஐதராபாத்தில் நிருபர்களை சந்தித்த பாஜக தேசிய தலைவர் அமித்ஷா, "ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற திட்டத்திற்கு சந்திரசேகர ராவ் ஆதரவு தெரிவித்தார். ஆனால், இன்று அவரது கட்சி, தனது நிலையை மாற்றிகொண்டு சிறிய மாநிலத்தில் இரண்டு தேர்தல் நடத்த வழி ஏற்படுத்திவிட்டார்.

மக்கள் தலையில் ஏன் இந்த செலவை ஏற்படுத்தினீர்கள் என சந்திரசேகர ராவை கேட்க விரும்புகிறேன். தெலுங்கானாவில் அனைத்து தொகுதிகளிலும் பா.ஜ.க போட்டியிடும். வலிமையான சக்தியாக மாநிலத்தில் உருவாகும். மத ரீதியாக இட ஒதுக்கீடு வழங்குவதை அரசியல் சட்டம் அனுமதி வழங்காது என்பது தெரியும். மாநிலத்தை ஆண்ட கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் வாக்குவங்கி அரசியல் மீண்டும் தொடரும்". இவ்வாறு அவர் கூறினார்.


அனைத்து தொகுதியிலும் பாஜக தனித்து போட்டியிடுமா அல்லது கூட்டணியுடன் தேர்தலை சந்திக்குமா என்று தெளிவாக அமித்ஷா தெரிவிக்கவில்லை. தேர்தல் நெருங்கும் போது அந்த முடிவு எடுக்கப்படும் என்றும் பாஜக தலைமை தெரிவித்துள்ளது.
First published: September 15, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...