• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • திரிணாமுல் எம்.பி தொடர்ந்த அவதூறு வழக்கு: பிப்ரவரி 22-ம் தேதி ஆஜராக அமித்ஷாவுக்கு கொல்கத்தா நீதிமன்றம் உத்தரவு

திரிணாமுல் எம்.பி தொடர்ந்த அவதூறு வழக்கு: பிப்ரவரி 22-ம் தேதி ஆஜராக அமித்ஷாவுக்கு கொல்கத்தா நீதிமன்றம் உத்தரவு

அமித் ஷா

அமித் ஷா

திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி தொடர்ந்த அவதூறு வழக்கில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கொல்கத்தா நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.

  • Share this:
    மேற்கு வங்க மாநிலத்தில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. மேற்கு வங்கத்தில் தற்போது மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி செய்துவருகிறது. மம்தா பானர்ஜியிடமிருந்து ஆட்சியைக் கைப்பற்ற பா.ஜ.க தீவிர முயற்சி செய்துவருகிறது. அதனால், பா.ஜ.கவுக்கும், திரிணாமுல் காங்கிரஸுக்கும் இடையே தீவிர மோதல் நடைபெற்றுவருகிறது. மம்தா பானர்ஜி, மோடியையும், அமித்ஷாவையும் மிகக் கடுமையாக விமர்சனம் செய்துவருகிறார். மேற்கு வங்கத்தில் அமித்ஷாவும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டுவருகிறார்.

    அவர், மம்தா பானர்ஜி மட்டுமல்லாது அவருடைய அண்ணன் மகனான அபிஷேக் பானர்ஜியையும் கடுமையாக விமர்சனம் செய்துவருகிறது. இந்தநிலையில், எம்.பி, எம்.எல்.ஏக்களுக்கான பிரத்யேக நீதிமன்றத்தில் அமித்ஷாவுக்கு எதிராக அபிஷேக் பானர்ஜி அவதூறு வழக்குத் தொடர்ந்துள்ளார்.

    அந்த மனுவில், ‘2018-ம் ஆண்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த அமித்ஷா, தன்னை அவதூறாக பேசியுள்ளார்’ என்று குறிப்பிட்டுள்ளார். அந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வரும் 22-ம் தேதி அமித்ஷா அல்லது அவருடைய வழக்கறிஞர் ஆஜராக வேண்டும்’ என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.


    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: