ஹோம் /நியூஸ் /இந்தியா /

காஷ்மீரில் தொழுகையின் போது தனது பேச்சை நிறுத்திய அமித் ஷா - குவியும் பாராட்டு

காஷ்மீரில் தொழுகையின் போது தனது பேச்சை நிறுத்திய அமித் ஷா - குவியும் பாராட்டு

அசானுக்காக பேச்சை நிறுத்திய அமித் ஷா

அசானுக்காக பேச்சை நிறுத்திய அமித் ஷா

“மசூதியில் ஏதேனும் நடந்து கொண்டிருக்கிறதா?” என கேட்ட போது, மேடையில் இருந்தவர், “அது அசானுக்கான ஒலி” என கூறியவுடன், சற்று நேரம் பேச்சை நிறுத்தி மேடையில் காத்திருந்தார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Jammu and Kashmir, India

  மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஜம்மு காஷ்மீரில் பேசிக்கொண்டிருக்கும் போது அருகிலுள்ள மசூதியில் தொழுகைக்கான ‘அசான்’ ஒலி வந்ததால், அவர் சற்று நேரம் பேசியதை நிறுத்தினார்.

  ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்திற்கு அடுத்த வருடம் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அங்கு வருகை தந்து வடக்கு காஷ்மீரின், பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள ஷவ்கத் அலி ஸ்டேடியத்தில் பேசிக்கொண்டிருந்தார்.

  அவர் பேசிக்கொண்டிருக்கும் போது மசூதியில் தொழுகை அழைப்புக்கான சத்தம் கேட்டது. உடனே பேச்சை நிறுத்திய அமித்ஷா, “மசூதியில் ஏதேனும் நடந்து கொண்டிருக்கிறதா?” என கேட்டார். உடனே, மேடையில் இருந்தவர் ஒருவர், “அது அசானுக்கான ஒலி” என கூறியவுடன், சற்று நேரம் பேச்சை நிறுத்தி மேடையில் காத்திருந்தார்.

  Also Read : முகேஷ் அம்பானி குடும்பத்தினருக்குக் கொலை மிரட்டல் விடுத்த நபர் கைது

  அசான் முடிந்தவுடன், அங்கு இருந்தவர்களிடம், “இப்போது நான் ஆரம்பிக்கலாமா?.. சத்தமாக கூறுங்கள்” என கேட்டார். உடனே அங்கு இருந்த மக்கள், “பேசுங்கள்” என சொன்ன உடன், தனது பேச்சை தொடர்ந்தார். அவர் பேச்சை நிறுத்திய அந்த நேரம், அங்கு இருந்த மக்கள் பலமாக கைதட்டியும், அவருக்கு ஆதரவான கோஷங்களை எழுப்பியும் அவரை பாராட்டினர்.

  Published by:Raj Kumar
  First published:

  Tags: Amit Shah, Bjp campaign, Jammu and Kashmir, Mosque