அஜித் பவார் ஏமாற்றவில்லை; சிவசேனாதான் துரோகம் செய்தது! அமித்ஷா ஆதங்கம்

அஜித் பவார் ஏமாற்றவில்லை; சிவசேனாதான் துரோகம் செய்தது! அமித்ஷா ஆதங்கம்
அமித்ஷா
  • News18
  • Last Updated: November 28, 2019, 10:40 PM IST
  • Share this:
மூன்று கட்சிகளுக்கும் பதவி வெறிதான் உள்ளது. அவர்களுக்கென்று பொது சித்தாந்தம் இல்லை என்று மத்திய உள்துறை அமைச்சர் மற்றும் பா.ஜ.க தலைவர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

ஜார்கண்ட் மாநிலத்தில் நியூஸ் 18 செய்தி நிறுவனம் சார்பில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய உள்துறை அமைச்சர் மற்றும் பா.ஜ.க தலைவர் அமித்ஷா கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், ‘அஜித் பவாரால் பா.ஜ.க ஏமாற்றப்படவில்லை. சரத் பவாரால் கூற ஏமாற்றபடவில்லை. ஆனால், சிவசேனாவால் ஏமாற்றப்பட்டது. தேசியவாத காங்கிரஸ் எப்போதும் எங்களுக்கு எதிராக சண்டையிட்டது.

ஆனால், சிவசேனா நம்பிக்கை துரோகம் செய்துவிட்டது. எப்போது இதுபோன்ற நம்பிக்கை துரோகம் ஏற்பட்டதோ அப்போதே தொண்டர்களுக்கு கோபம் வருவது இயல்பு. அதற்கு மேல் இந்த விவகாரம் குறித்து சொல்வதற்கு விருப்பம் இல்லை. மகாராஷ்டிராவில் என்ன நடந்தது என்பது ஒட்டுமொத்த நாட்டுக்கும் தெரியும். நாங்கள் தேர்தலில் போட்டியிடும் பா.ஜ.கவும், சிவசேனாவும் ஒன்றாக போட்டியிட்டது. மக்கள் தீர்ப்பு பா.ஜ.க பக்கம் இருந்தது. தேர்தல் முடிவு வந்த பிறகு சிவசேனா புதிய கோரிக்கைகளைக் கொண்டுவந்தது.


தேர்தல் பிரச்சாரத்தின்போது, உத்தவ் தாக்கரே பங்கேற்றிருந்த மேடைகளிலேயே பா.ஜ.க ஆட்சிக்கு வந்தால் தேவேந்திர பட்னவிஸ்தான் முதல்வராக இருப்பார் என்று தெரிவித்தோம். சிவசேனாவுக்கு முதல்வர் பதவி அளிப்பதாக தெரிவிக்கவே இல்லை. பா.ஜ.க ஒரு தடவை கூட குதிரை பேரத்தில் ஈடுபடவில்லை. சிவசேனாவுடன் ஏன் கை கோர்த்தார்கள் என்று ராகுல் காந்தியும், சோனியா காந்தியும் என்ன பதிலளிப்பார்கள்’ என்று கேள்வி எழுப்பினார்.

Also see:
First published: November 28, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்