நேபாளத்துக்கும், இலங்கைக்கும் பா.ஜ.கவை விரிவுபடுத்தவேண்டும் என்று அமித்ஷா கூறினார் - திரிபுரா முதல்வர்

நேபாளத்துக்கும், இலங்கைக்கும் பா.ஜ.கவை விரிவுபடுத்தவேண்டும் என்று அமித்ஷா கூறினார் - திரிபுரா முதல்வர்

பிப்லப் டெப்

நேபாளம், இலங்கையில் பா.ஜ.கவை விரிவுபடுத்தவுள்ள திட்டத்தை அமித்ஷா பகிர்ந்தார் என்று திரிபுரா முதல்வர் பிப்லப் டெப் தெரிவித்துள்ளார்.

 • Share this:
  2014 நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க வெற்றி பெற்று மோடி பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், பா.ஜ.கவின் தலைவராக அமித்ஷா நியமிக்கப்பட்டார். அவர், கட்சித் தலைவராக நியமிக்கப்பட்டதிலிருந்து பா.ஜ.க தொடர்ந்து பல்வேறு மாநிலங்களில் வெற்றி பெற்று தங்களது ஆட்சியை அமைத்தது. கம்யூனிஸ்ட்களின் கோட்டையாக இருந்த திரிபுராவிலும் பா.ஜ.க 2018-ம் ஆண்டு ஆட்சியமைத்தது. பிப்லப் டெப் தலைமையிலான பா.ஜ.க ஆட்சி திரிபுராவில் நடைபெற்றுவருகிறது. நேற்று கட்சிக் கூட்டத்தில் பேசிய பிப்லப் டெப், 2018-ம் ஆண்டு திரிபுராவில் நடைபெறவிருந்த தேர்தலுக்கு அமித்ஷாவின் தலைமையில் தயாரானது தொடர்பாக நினைவுகூர்ந்தார்.

  இதுகுறித்து பேசிய அவர், ‘வடகிழக்கு மாநிலங்களுக்கான பா.ஜ.க செயலாளராக இருந்த அஜய்ஜம்வால், பா.ஜ.க பல மாநிலங்களில் ஆட்சியமைத்துள்ளது என்று தெரிவித்தார். அதற்கு, அமித்ஷா நேபாளமும், இலங்கையும்தான் மீதமிருக்கிறது. நாம், நம்முடைய கட்சியை நேபாளத்திலும், இலங்கையிலும் விரிவுபடுத்தி, அங்கும் ஆட்சியமைக்க வேண்டும் என்றார் அமித்ஷா.

  அமித்ஷாவின் தலைமையில் உலகின் மிகப்பெரிய கட்சியாக பா.ஜ.க உருவெடுத்துள்ளது. கேரளாவில் காங்கிராஸும், கம்யூனிஸ்ட் கட்சியும் மாற்றி மாற்றி ஆட்சியமைக்கும் சூழலை பா.ஜ.க மாற்றிக்காட்டும்’ என்று தெரிவித்தார்.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published: