இந்திய தண்டனை சட்டங்களில் பெரிய அளவில் மாற்றம் செய்யப்படும் - அமித் ஷா

அமித்ஷா

ஆறு மாதங்களுக்கு மேல் தண்டனை கிடைக்க வாய்ப்புள்ள குற்றங்களில், தடய அறிவியல் விசாரணையை கட்டாயமாக்க வேண்டும்.

 • Share this:
  தற்போதைய சூழ்நிலைக்கு ஏற்ப ஐபிசி, எனப்படும் இந்திய தண்டனை சட்டம் உள்ளிட்டவற்றில் பெரிய அளவில் மாற்றம் செய்யப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார்.

  குஜராத் மாநில முதலமைச்சர் விஜய் ரூபானி தலைமையிலான, பாஜக அரசு அமைந்துள்ளது. அங்கு காந்தி நகரில் அமைந்துள்ள தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழகத்தில் சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. அதில் பாஜக மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா பங்கேற்று பேசினார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  அப்போது, காவல்துறையினர் மீது இரண்டு குறைகளையே கூறுகின்றனர். ஒன்று, எந்த நடவடிக்கையும் எடுப்ப தில்லை; மற்றொன்று வரம்புக்கு மீறி செயல்படுகின்றனர் என்கின்றனர். காவல்துறையினர் நடுநிலையோடும், நியாயமாகவும் செயல்பட, குற்ற விசாரணையில் சரியான சாட்சிகள் கிடைக்க வேண்டும். அறிவியல்பூர்வமாக இதை நாம் அணுக வேண்டும். அந்தக் காலத்தில் கூறுவதுபோல மூன்றாம் நிலை சித்ரவதை, இனி பயன்படாது. அதில் இருந்து நாம் வெளியே வர வேண்டும்.

  தற்போதுள்ள சூழ்நிலைக்கு ஏற்ப ஐபிசி, எனப்படும் இந்திய தண்டனை சட்டம், சிஆர்பிசி எனப்படும் குற்றவியல் நடைமுறை சட்டம், இந்திய சாட்சிகள்சட்டம் ஆகியவற்றில் பெரிய அளவில் மாற்றம் செய்யப்பட வேண்டும். இது தொடர்பாக மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.

  ஆறு மாதங்களுக்கு மேல் தண்டனை கிடைக்க வாய்ப்புள்ள குற்றங்களில், தடய அறிவியல் விசாரணையை கட்டாயமாக்க வேண்டும். அதற்கு தேவையான பயிற்சி பெற்றவர்கள் அதிகளவில் தேவை. அறிவியல் பூர்வமான விசாரணையின் வாயிலாக எந்த குற்றத்திலும் சரியான, நியாயமான சாட்சிகள், ஆதாரங்கள் கிடைக்கும்.” என்று கூறினார்.

  Must Read : வெவ்வேறு தடுப்பூசிகளை போடுவது ஆபத்தானது - உலக சுகாதார நிறுவனம்

  இந்நிலையில், குஜராத்தில் போதை மருந்துகள் மற்றும் சைக்கோட்ரோபிக் பொருட்களுக்கான ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு மையத்தை சில தினங்களுக்கு முன்னர் திறந்து வைத்தார். அப்போது அவர் பேசுகையில், “பிரதமர் மோடியின் கீழ், போதைப்பொருட்களை நம் நாட்டிற்குள் நுழைய விடமாட்டோம், போதைப்பொருட்களின் பாதையாக இந்தியாவை மாற விடமாட்டோம் என மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. இந்தியா இன்னொரு ஆபத்தைச் சந்தித்து வருகிறது. அது போதைப்பொருள் பயங்கரவாதம். அதைத் தடுப்பது முக்கியம் என கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
  Published by:Suresh V
  First published: