• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • கும்பல் தாக்குதல்களை கட்டுப்படுத்த சிறப்பு சட்டங்கள் தேவையில்லை - அமித்ஷா

கும்பல் தாக்குதல்களை கட்டுப்படுத்த சிறப்பு சட்டங்கள் தேவையில்லை - அமித்ஷா

அமித்ஷா

அமித்ஷா

  • News18
  • Last Updated :
  • Share this:
    கும்பல் தாக்குதல்கள் மோடி ஆட்சியில் குறைந்துள்ளதாகவும், இதனை கட்டுப்படுத்த தற்போது உள்ள சட்டங்களே போதும் என்றும் சிறப்பு சட்டங்கள் தேவையில்லை என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா நியூஸ் 18-க்கு அளித்துள்ள சிறப்பு நேர்காணலில் கூறியுள்ளார்.

    நாட்டின் பல பகுதிகளில் குறிப்பாக வட மாநிலங்களில் குழந்தை கடத்தல் உள்ளிட்ட பல வதந்திகள் காரணமாக கும்பல் தாக்குதல்கள் நடக்கின்றன. அப்பாவிகள் இதுபோன்ற தாக்குதல்களில் பலியாகின்றனர். இது தவிர, பசுக்காவலர்கள் தாக்குதலிலும் பலர் உயிரிழந்துள்ளனர்.

    இந்த நிலையில், நியூஸ் 18 குழுமத்தின் தலைமை செய்தி ஆசிரியர் ராகுல் ஜோஸிக்கு உள்துறை அமைச்சர் மற்றும் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா அளித்த பேட்டியில், கும்பல் தாக்குதல்களை கட்டுப்படுத்த தற்போது உள்ள சட்டங்களே போதும் என்றும் சிறப்பு சட்டங்கள் தேவையில்லை என்று கூறியுள்ளார்.

    “ஒருவரை மற்றொருவர் கொலை செய்யும் போது சட்டம் 302 பயன்படுத்தப்படுகிறது. அந்த கொலைக்கு மதப்பூச்சை சிலர் பூசுகின்றனர். மோடி ஆட்சியில் கும்பல் தாக்குதல்கள் அதிகரித்துள்ளதாக சொல்லப்படுவதில் உண்மை இல்லை.

    கிராமங்களில் ஏதேனும் கொள்ளை நடந்தால், திருடனைப் பிடித்தபின் மக்கள் அவரைத் தாக்கினால், மரணம் நடக்கிறது. கடந்த காலங்களிலும் இதுபோன்ற சம்பவம் நடந்துள்ளது. ஆனால், தற்போது இந்த சம்பவங்களுக்கு ஒரு வண்ணம் ஒரு சிலரால் வழங்கப்படுகிறது” என்று கூறியுள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankar
    First published: