வடகிழக்கு மாநிலங்களின் சிறப்பு அந்தஸ்து விவகாரம்! அமித்ஷா விளக்கம்

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370-வது பிரிவு இயல்பிலேயே தற்காலிக தன்மையைக் கொண்டிருந்தது.

news18
Updated: September 8, 2019, 6:09 PM IST
வடகிழக்கு மாநிலங்களின் சிறப்பு அந்தஸ்து விவகாரம்! அமித்ஷா விளக்கம்
அமித்ஷா
news18
Updated: September 8, 2019, 6:09 PM IST
வடகிழக்கு மாநிலங்களுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 371-வது பிரிவு ரத்து செய்யப்படாது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதியளித்துள்ளார்.

காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய சட்டப்பிரிவு 370-வை குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற்று மத்திய அரசு நீக்கியது. அதனைத் தொடர்ந்து வடகிழக்கு மாநிலங்களுக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 371-வது பிரிவும் ரத்து செய்யப்படும் என்று வதந்திகள் பரவிவந்தன. இந்தநிலையில், 68-வது வடகிழக்கு மாநில கவுன்சில் கூட்டத்தில் அமித்ஷா கலந்துகொண்டு பேசினார்.

அதில், பேசிய அவர், ‘வடகிழக்கு மாநிலங்களுக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 371-வது பிரிவில் மத்திய அரசு திருத்தம் கொண்டுவராது. காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370-வது பிரிவு இயல்பிலேயே தற்காலிக தன்மையைக் கொண்டிருந்தது. ஆனால், 371-வது அத்தகையது அல்ல. 370-வது சட்டப் பிரிவுக்கும், 371-வது பிரிவுக்கும் மிகப் பெரிய வித்தியாசம் உள்ளது.


ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு, வடகிழக்கு மாநிலங்களுக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 371-வது பிரிவு ரத்து செய்யப்படும் என்று தவறான செய்திகள் பரவுகின்றன. 371-வது பிரிவு ரத்து செய்யப்படாது என்று நான், நாடாளுமன்றத்திலேயே தெளிவுபடுத்தியுள்ளேன். இன்று, வடகிழக்கு மாநில முதல்வர்கள் முன்னிலையிலும் அந்த உறுதி அளித்துக்கொள்கிறேன்’ என்று தெரிவித்தார்.

Also see:

First published: September 8, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...