ஃபரூக் அப்துல்லாவின் தந்தையை 11 ஆண்டுகள் சிறையில் வைத்தது காங்கிரஸ்... அமித் ஷா குற்றச்சாட்டு!

ஃபரூக் அப்துல்லாவின் தந்தையை 11 ஆண்டுகள் சிறையில் வைத்தது காங்கிரஸ்... அமித் ஷா குற்றச்சாட்டு!
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா
  • News18
  • Last Updated: December 10, 2019, 8:15 PM IST
  • Share this:
தேசிய மாநாட்டு கட்சித் தலைவர் ஃபரூக் அப்துல்லா-வின் தந்தையை 11 ஆண்டுகள் சிறையில் வைத்தது காங்கிரஸ்தான் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றம்சாட்டியுள்ளார்.

மக்களவை இன்று கூடியதும், ஜம்மு-காஷ்மீரில் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ள தலைவர்கள் எப்போது விடுவிக்கப்படுவார்கள் என்று மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கேள்வி எழுப்பினார்.

எப்போது இயல்பு நிலை திரும்பும் என்றும் அவர் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதியில் முற்றிலும் இயல்பு நிலை திரும்பியிருப்பதாகக் கூறினார்.


காங்கிரஸைப் பொருத்தவரை இயல்புநிலை என்பது என்ன என்று அவர் கேள்வி எழுப்பினார். அரசியல் தலைவர்களை விடுவிப்பதற்கு உகந்த நேரம் வந்ததும், விடுவிக்கப்படுவார்கள் என்றும், காங்கிரஸைப் போன்று 11 ஆண்டுகள் சிறை வைக்க மாட்டோம் என்றும் அமித் ஷா தெரிவித்தார்.

Also see...
First published: December 10, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading