முகப்பு /செய்தி /இந்தியா / நாடு முழுவதும் பொதுசிவில் சட்டத்தை அமல்படுத்துவோம்... மத்திய அமைச்சர் அமித்ஷா உறுதி

நாடு முழுவதும் பொதுசிவில் சட்டத்தை அமல்படுத்துவோம்... மத்திய அமைச்சர் அமித்ஷா உறுதி

நாடு முழுவதும் பொதுசிவில் சட்டத்தை அமல்படுத்துவோம்... மத்திய அமைச்சர் அமித்ஷா உறுதி

Exclusive Interview With Home Minister Amit Shah : குஜராத்தில் முழு பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சி அமைப்போம் என நியூஸ் 18 தொலைக்காட்சிக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் மத்திய அமைச்சர் அமித் ஷா உறுதி அளித்துள்ளார்.

  • Last Updated :
  • Gujarat, India

குஜராத்தில் முழு பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சி அமைப்போம் என கூறியுள்ள உள்துறை அமைச்சர் அமித் ஷா பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவோம் என்றார்.

குஜராத் சட்டப்பேரவைக்கு டிசம்பர் ஒன்று மற்றும் ஐந்தாம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது.

இந்நிலையில் குஜராத் அதிவேஷன் (Gujarat Adhiveshan) என்ற தலைப்பில் நியூஸ்18 குழுமம் சார்பில் அகமதாபாத்தில் சிறப்பு கலந்துரையாடல் நடைபெற்றது.

நெட்வொர்க் 18 மேலாண் இயக்குநர் மற்றும் முதன்மை செய்தி ஆசிரியர் ராகுல் ஜோஷியிடம் கலந்துரையாடிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, குஜராத்தில் முழு பெரும்பான்மையுடன் பாஜக மீண்டும் ஆட்சியமைக்கும் என்றார்.

மேலும், இதுவரை இல்லாத அளவு இடங்களையும் கைப்பற்றும் என்றார். ராமர் கோயில், 370வது பிரிவு ரத்து உள்பட பாஜக அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன என்ற அமித் ஷா, மக்களுக்கு அதிகாரம் வழங்குதே தங்களது நோக்கம் என்றார்.

top videos

    காங்கிரஸின் கடந்த 10 ஆண்டு கால ஆட்சியில் 12 லட்சம் கோடி அளவுக்கு ஊழல் நடைபெற்றுள்ளது என்ற அமித் ஷா, இந்தியா முழுவதும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்துவோம் என்றார்.

    First published:

    Tags: Amit Shah, Exclusive