பல கட்சி ஜனநாயகமுறை தோல்வியடைந்தாக மக்கள் கருதுகின்றனர்! அமித்ஷா சர்ச்சைக் கருத்து

உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள ஜனநாயக முறைகளை ஆய்வு செய்து பல கட்சி ஜனநாயக முறையை கொண்ட அரசியலமைப்புச் சட்டத்தை அரசியலமைப்பு நிர்ணய சபை உருவாக்கியது.

பல கட்சி ஜனநாயகமுறை தோல்வியடைந்தாக மக்கள் கருதுகின்றனர்! அமித்ஷா சர்ச்சைக் கருத்து
அமித்ஷா
  • News18
  • Last Updated: September 17, 2019, 4:39 PM IST
  • Share this:
பல கட்சி நாடாளுமன்ற ஜனநாயகமுறை தோல்வியடைந்துள்ளது என்ற சந்தேகம் மக்களுக்கு உள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். அவருடைய கருத்து தேசிய அளவில் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

டெல்லியில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ‘முந்தைய காங்கிரஸ் ஆட்சிக் காலத்தின்போது, தினந்தோறும் செய்தித் தாள்களில் ஊழல் குறித்த செய்திகள் இடம்பெற்றன. எல்லைகள் பாதுகாப்பில்லாமல் இருந்தது. ராணுவ வீரர்களின் தலைகள் துண்டிக்கப்பட்டன. பெண்கள் பாதுகாப்பில்லாத தன்மையை உணர்ந்தனர். ஒவ்வொரு நாளும் மக்கள் சாலையில் போராட்டம் நடத்தினர். அந்த அரசு அரசியல் ரீதியாக ஒரு பக்க சார்பாக இருந்தது. எந்த முடிவுகளும் எடுக்கப்படவில்லை.

அந்த அரசின் எல்லா அமைச்சர்களும் தங்களை பிரதமராக நினைத்துக் கொண்டனர். வாக்கு வங்கி அரசியல் காரணமாக அந்த அரசு எந்த முடிவுகளையும் எடுக்கவில்லை. 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சியில் இருந்தநிலையிலும், கடந்த அரசு எந்த பெரிய முடிவுகளையும் எடுக்கவில்லை. ஆனால், நம்முடைய அரசு ஐந்து ஆண்டுகளில் ஜி.எஸ்.டி, பண மதிப்பு நீக்கம், துல்லியத் தாக்குதல் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட முக்கிய முடிவுகளை எடுத்துள்ளது.


உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள ஜனநாயக முறைகளை ஆய்வு செய்து பல கட்சி ஜனநாயக முறையை கொண்ட அரசியலமைப்புச் சட்டத்தை அரசியலமைப்பு நிர்ணய சபை உருவாக்கியது. அதனுடைய நோக்கம், தேசம் வளர்ச்சியடைவதன் மூலம் மக்கள் சரிசமமான உரிமைகளை பெற முடியும் என்று கருதினர். சுதந்திரம் கிடைத்து 70 ஆண்டுகளுக்குப் பிறகு, பல கட்சி நாடாளுமன்ற ஜனநாயக முறை தோல்வியடைந்துள்ளது என்ற சந்தேகம் மக்களுக்கு உள்ளது.

நம்மால், நம்முடைய இலக்கை எட்ட முடியுமா? அவர்கள் அவநம்பிக்கையடைந்துள்ளனர்’ என்று தெரிவித்தார். அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையான பல கட்சி நாடாளுமன்ற ஜனநாயக முறைக்கு எதிராக உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Also see:
First published: September 17, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading