மோடி 2002-ல் ஏன் சட்டசபையை கலைத்தார்? - அமித் ஷாவுக்கு டிஆர்எஸ் கேள்வி

news18
Updated: October 11, 2018, 7:50 PM IST
மோடி 2002-ல் ஏன் சட்டசபையை கலைத்தார்? - அமித் ஷாவுக்கு டிஆர்எஸ் கேள்வி
சந்திரசேகர ராவ்
news18
Updated: October 11, 2018, 7:50 PM IST
தெலுங்கானாவில் முன் கூட்டியே தேர்தல் நடத்துவதை விமர்சித்த அமித் ஷாவுக்கு, 2002-ம் ஆண்டு குஜராத்தில் மோடி ஏன் சட்டசபையை கலைத்தார்? என தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.

தெலுங்கானா சட்டசபைக்கு அடுத்த ஆண்டு மே மாதம் வரை பதவிக்காலம் இருக்கும் நிலையில், முன் கூட்டியே தேர்தல் நடத்த திட்டமிட்ட முதல்வர் சந்திரசேகர ராவ், சட்டசபையை கலைக்க ஆளுநருக்கு பரிந்துரை செய்தார். இதனையடுத்து, அம்மாநில சட்டசபை கலைக்கப்பட்டது.

டிசம்பர் மாதம் 7-ம் தேதி அங்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அனைத்து அரசியல் கட்சிகளும் சூடு பறக்க பிரசாரத்தை தொடங்கியுள்ளன.


கரீம் நகரில் நேற்று நடந்த பாஜக பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா கலந்துகொண்டு பேசுகையில், ``அடுத்த ஆண்டு நடக்க உள்ள பாராளுமன்றத் தேர்தலுடன் தெலுங்கானாவுக்கு தேர்தல் நடத்தப்பட வேண்டும். ஆனால், சந்திர சேகர ராவ் சட்டசபையை கலைத்ததன் காரணமாக முன் கூட்டியே தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதனால், கோடிக்கணக்கான ரூபாய் வீணாக செலவாக உள்ளது.

சந்திரசேகர ராவுக்கு மோடி பயம் பிடித்துள்ளது. பாராளுமன்ற தேர்தலுடன் சட்டசபை தேர்தலை நடத்தினால் மோடி அலை தாக்கத்தை ஏற்படுத்துமோ என்ற பயத்தில் சட்டசபையை கலைத்துள்ளார்” என கூறினார்.

அமித் ஷாவுக்கு பதிலடி கொடுத்துள்ள தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியின் எம்.பி வினோத் குமார், “2002-ம் ஆண்டில் மோடி குஜராத் முதல்வராக இருந்த போது சட்டசபையை கலைத்துவிட்டு முன் கூட்டியே தேர்தலை சந்தித்தாரே ஏன்? இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, வாஜ்பாய், ராமாராவ், சந்திரபாபு நாயுடு என பல தலைவர்கள் இதே போல தேர்தலை சந்தித்துள்ளனர்” என தெரிவித்துள்ளார்.
First published: October 11, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...