குறைந்த மக்களுடன் வாழும் இனக் குழுக்களின் நலன் பெரும்பாலும் சமூகத்தின் கண்களுக்கு முன் வராமலே போய்விடும். அவர்களின் தேவைகளையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும் அவசியம் அதிகம் தேவைப்படும். அப்படியான ஒரு சமூகம் தான் பழங்குடியினர் சமூகம். குறிஞ்சி என்று தமிழ் இலக்கியங்கள் வரையறை செய்யும் மலை, மலை சார்ந்த இடத்தைத் தங்கள் வீடாக்கக் கொண்டு வாழ்பவர்கள். மலைக்காடுகளில் இருந்து கிடைக்கும் வனப் பொருட்களை விற்று வாழ்க்கை நடத்துபவர்கள். இவர்களுக்கு கல்வியையும் வேலை வாய்ப்பையும் கொண்டு சேர்ப்பது அரசின் அத்தியாயக் கடமை.
ஏகலைவா உறைவிடப் பள்ளிகள் நிறுவி பழங்குடியினக் குழந்தைகளுக்கு பள்ளிக்கல்வியை அரசு உறுதி செய்ய முயற்சித்து வருகிறது. இதன் அடுத்தகட்டமாக ஆராய்ச்சி நிறுவங்கள், கல்லூரிகள் நிறுவி வருகின்றன.
அதோடு,பழங்குடியினர் அமைச்சகத்தின் ‘ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ்’ கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, உள்துறை அமைச்சர், அமித் ஷா தேசிய பழங்குடி ஆராய்ச்சி நிறுவனத்தை ஜூன் 7, 2022( இன்று) புது தில்லியில் திறந்து வைத்தார்.
NTRI ஒரு தேசிய அளவிலான நிறுவனமாக இருக்கும். கல்வி, நிர்வாக மற்றும் சட்டமன்றத் துறைகளில் உள்ள பழங்குடியினர் பிரச்சினைகள் மற்றும் விஷயங்களின் மையமாக இந்நிறுவனம் மாறும் என்று கருதப்படுகிறது. இது புகழ்பெற்ற ஆராய்ச்சி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், நிறுவனங்கள் மற்றும் கல்வி அமைப்புகள் மற்றும் வளர்ச்சி மையங்களுடன் ஒத்துழைத்து நெட்வொர்க் ஆக வேலை செய்யும்.
இளைஞர்களின் கனவை நனவாக்க 'ஜன் சமர்த்' கைகொடுக்கும் - பிரதமர் மோடி
இது பழங்குடியினர் ஆராய்ச்சி நிறுவனங்கள் (TRIகள்), சிறப்பு மையங்கள் (CoEகள்), NFS இன் ஆராய்ச்சி அறிஞர்களின் திட்டங்களைக் கண்காணிக்கும். மேலும், ஆராய்ச்சி மற்றும் பயிற்சியின் தரத்தை மேம்படுத்துவதற்கான விதிமுறைகளை வகுக்கும். பழங்குடியினர் விவகார அமைச்சகம் மற்றும் மாநில நலத் துறைகளுக்கு கொள்கை உள்ளீடுகளை வழங்குவது, பழங்குடியினரின் வாழ்க்கை முறையின் சமூக-பொருளாதார அம்சங்களை மேம்படுத்த அல்லது ஆதரிக்கும் திட்டங்கள், PMAAGY இன் தரவுத்தளத்தை உருவாக்குதல் மற்றும் பராமரித்தல், அமைப்பில் வழிகாட்டுதல்களை வழங்குதல் ஆகியவை இதன் மற்ற செயல்பாடுகளாகும். பழங்குடியினர் அருங்காட்சியகங்களை நடத்துதல் மற்றும் இந்தியாவின் வளமான பழங்குடி கலாச்சார பாரம்பரியத்தை ஒரே குடையின் கீழ் காட்சிப்படுத்துதல்ஆகிய பணிகளை கையாளும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பழங்குடியினர் நல அமைச்சர் அர்ஜுன் முண்டா, சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு உட்பட பிற அமைச்சரவை மற்றும் மாநில அமைச்சர்கள், பழங்குடியினர் நல துணை அமைச்சர் ரேணுகா சிங் சருதா, MoS பழங்குடியினர் நலசங்க தலைவர் பிஷ்வேஸ்வர் துடு, சிறுபான்மையினர் நல இணை அமைச்சர் ஃபக்கன் சிங் குலாஸ்தே மற்றும் பிற முக்கியஸ்தர்கள் விழாவில் கலந்து கொண்டனர்.
யூடியூப் நேரலை காண :
https://www.youtube.com/watch?v=9DlloV7esIAஇன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.