போராடுபவர்களைச் சுட்டுத்தள்ளுங்கள் என்று பா.ஜ.க தலைவர்கள் பேசியிருக்கக் கூடாது! தோல்வி குறித்து அமித்ஷா விளக்கம்

போராடுபவர்களைச் சுட்டுத்தள்ளுங்கள் என்று பா.ஜ.க தலைவர்கள் பேசியிருக்கக் கூடாது! தோல்வி குறித்து அமித்ஷா விளக்கம்
அமித் ஷா (கோப்பு படம்)
  • News18 Tamil
  • Last Updated: February 13, 2020, 10:12 PM IST
  • Share this:
டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பாக தனது கணிப்புகள் தவறாகி விட்டதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற தனியார் ஆங்கில தொலைகாட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, அமித்ஷா பேசினார். அப்போது டெல்லி தேர்தல் முடிவுகளை சிஏஏ மற்றும் என்.பி.ஆர் மீதான தீர்ப்பு கிடையாது என்றும் அவர் தெரிவித்தார்.

சிஏஏ ஆதரவு போராட்டங்கள் அமைதி வழியில் நடப்பதாகவும், சிஏஏ எதிர்ப்பு போராட்டங்கள் வன்முறை வழியில் செல்வதாகவும் அமித்ஷா குற்றம்சாட்டினார். சிஏஏ குறித்து விவாதிக்க யார் விரும்பினாலும் தன்னை சந்திக்கலாம், தான் தயாராகவே உள்ளதாகவும் அமித்ஷா கூறினார். வன்முறையை ஒருபோதும் சகித்துக் கொள்ள முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.


தொடர்ந்து பேசிய அவர், ‘போராடுபவர்களைச் சுட்டுத் தள்ளுங்கள், இந்தியா- பாகிஸ்தான் போட்டி என்று பா.ஜ.க தலைவர்கள் பேசியிருக்கக் கூடாது. அதனால், பா.ஜ.க தலைவர்களின் வெறுப்பு பேச்சால் கட்சி மிகவும் பாதிக்கப்பட்டது. இத்தகைய பேச்சுகளின் மூலம் பா.ஜ.க மக்களிடமிருந்து தூரத்துக்குச் சென்றுவிட்டது. பா.ஜ.க வெறும் தேர்தல் வெற்றிக்காக மட்டும் போராடவில்லை. தேர்தலில் வெற்றி பெறுவதன் மூலம் அதனுடைய சித்தாந்தத்தை விரிவாக்கப் போட்டியிடுகிறது’ என்று தெரிவித்தார்.

 
First published: February 13, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்