• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • வடகிழக்கில் தொடரும் போராட்டம்...! குடியுரிமை சட்டத்தில் திருத்தம் செய்ய அமித் ஷா சம்மதம்

வடகிழக்கில் தொடரும் போராட்டம்...! குடியுரிமை சட்டத்தில் திருத்தம் செய்ய அமித் ஷா சம்மதம்

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா

  • News18
  • Last Updated :
  • Share this:
    குடியுரிமை சட்டத்திற்கு வடகிழக்கு மாநிலங்களில் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், அவர்களின் அச்சத்தை போக்கும் வகையில் சில திருத்தங்கள் செய்யத் தயார் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதியளித்துள்ளார்.

    பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் நாடுகளில் இருந்து இந்தியாவில் குடியேறிய இஸ்லாமியர்கள் அல்லாத சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்கும் மசோதா, நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு சட்டமாகியுள்ளது.

    இதனால், அண்டை நாடுகளில் இருந்து குடியேறியவர்களால் தங்களின் அரசு வேலைவாய்ப்பு, கல்வி, பொருளாதார வாய்ப்புகள் பறிபோகும் என வடகிழக்கு மாநில பூர்வ குடிகள் அச்சம் தெரிவித்துள்ளனர். எனவே, இந்த சட்டத்திற்கு எதிராக வடகிழக்கு மாநிலங்களில் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.

    இந்நிலையில், ஜார்க்கண்ட் மாநிலம் தன்பத் நகரில் நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில் அமித்ஷா பங்கேற்று, பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார். அப்போது, மேகாலயா முதலமைச்சர் கான்ராட் சங்மா நேற்று தன்னை சந்தித்து, போராட்டத்தின் தீவிரம் குறித்து எடுத்துரைத்ததாக குறிப்பிட்டார்.

    மேலும், வடகிழக்கு மாநில மக்களின் அச்சத்தை போக்கும் வகையில் குடியுரிமை சட்டத்தில் சில திருத்தங்கள் கொண்டுவர திட்டமிட்டுள்ளதாக கூறினார். இதுகுறித்து, கிறிஸ்துமஸ் பண்டிகைக்குப் பின் முடிவு செய்யப்படும் என்றும் அமித் ஷா தெரிவித்தார்.

     

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankar
    First published: