பிரதமர் மோடி உடன் அமித்ஷா மீண்டும் சந்திப்பு - ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ஆலோசித்தது என்ன?

ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாக பிரதமர் மோடியை உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று மீண்டும் சந்தித்து பேசினார்.

பிரதமர் மோடி உடன் அமித்ஷா மீண்டும் சந்திப்பு - ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ஆலோசித்தது என்ன?
மோடி மற்றும் அமித் ஷா
  • Share this:
டெல்லியில் உள்ள பிரதமர் இல்லத்தில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இந்த சந்திப்பு நடைபெற்றது.

அப்போது, அனைத்து மாநில அரசுகளுடன் நடத்திய ஆலோசனையின்படி ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் தளர்வுகள் அளிப்பது தொடர்பான இறுதி அறிக்கையை அமித் ஷா வழங்கியதாகக் கூறப்படுகிறது.

தொற்று பாதிப்பு அதிகம் உள்ள மும்பை, கொல்கத்தா, அகமதாபாத், சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 13 நகரங்களில் ஊரடங்கை கடுமையாக அமல்படுத்துவது, பள்ளி, கல்லூரிகள், வணிக நிறுவனங்கள், வழிபாட்டு தலங்களை திறப்பது குறித்து விவாதித்ததாக கூறப்படுகிறது.


மேலும், ஊரடங்கில் தளர்வுகள் அளிப்பது குறித்து அந்தந்த மாநில அரசுகளே முடிவு செய்துகொள்ளலாம் என்றும் இந்த கூட்டத்தில் பேசப்பட்டதாக தெரிகிறது.

Also read... உயிரிழந்த செவிலியர் பிரிசில்லா குடும்பத்திற்கு ₹ 5 லட்சம் நிதியுதவி அறிவிப்பு




Also see...
First published: May 30, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading