கர்நாடக எல்லைப் பகுதியில் உள்ள பெலகாவி, பீதர், கார்வார் ஆகிய மாவட்டங்களில் சுமார் 800க்கும் மேற்பட்ட கிராமங்களில் மராத்தி மொழி பேசும் மக்கள் அதிகமாக உள்ளனர். இந்த மாவட்டங்களை மகாராஷ்டிராவில் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக உள்ளது. இதற்கு கர்நாடக மாநிலத்தில் கடும் எதிர்ப்பு உள்ளது.
இந்த பூசலுக்கு வலு சேர்க்கும் விதமாக மகாராஷ்டிரா மாநில அமைச்சர்கள் கர்நாடகாவில் உள்ள எல்லை கிராமங்களை ஆய்வு செய்யவுள்ளதாக தகவல் வெளியாகின. இதற்கு கர்நாடக மாநில அரசு கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளது.இந்த பூசல் தொடர்பாக கர்நாடக அமைப்பினர் எல்லையில் போராட்டம் ஆர்ப்பாட்டங்களையும் நடத்திய நிலையில் சில இடங்களில் வாகனங்கள் சூறையாடப்பட்டன.விவகாரம் பூதாகரமானதால் இரு மாநில எல்லைகளிலும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா டெல்லியில் நேற்று கர்நாடகா முதலமைச்சர் பசவராஜ் பொம்மை மற்றும் மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே ஆகியோரை ஒன்றாக சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்பில் மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் கர்நாடகா முதலமைச்சர் அரகா ஞானேந்திரா ஆகியோரும் உடன் இருந்தனர்.
இந்த சந்திப்புக்குப் பின் பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இரு மாநிலங்களில் இருந்தும் தலா 3 அமைச்சர்கள் என 6 அமைச்சர்கள் அமர்ந்து ஆலோசித்து இந்த பிரச்சனைக்கு தீர்வு காணுவார்கள்.அதேபோல், ஒரு மூத்த ஐபிஎஸ் அதிகாரி தலைமையிலான குழு ஒன்றை அமைக்க இரு மாநிலங்களும் ஒத்துக்கொண்டுள்ளன.
இந்த குழு தான் அரசியல் சாசன விதிகள் மற்றும் சட்டம் ஒழுங்கை நிலைநிறுத்த கண்காணிப்பில் ஈடுபடும். மேலும், இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்குப் பின்னர் தான் அடுத்த முக்கிய முடிவுகள் எடுக்க முடியும். அதுவரை தேவையற்ற வதந்திகளை, போலிச் செய்திகளை சமூக வலைத்தளம் மூலம் பரப்புவோர் மீது வழக்கு பதிவு செய்து காவல்துறை நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.
இதையும் படிங்க: அருணாச்சலப் பிரதேச எல்லையில் அத்துமீறிய சீனப்படை... விரட்டியடித்த இந்திய வீரர்கள் - வைரலாகும் வீடியோ
அதேபோல், நாட்டின் உள்துறை அமைச்சராக எதிர்க்கட்சிகளிடம் கோருவது இது தான். இரு மாநில மக்கள் நலன் சம்பந்தப்பட்ட இது போன்ற பிரச்சனைகளில் அரசியல் செய்ய வேண்டாம். எனவே, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், உத்தவ் தாக்கரே குழு ஆகிய கட்சிகள் இந்த விவகாரத்தில் அரசியல் செய்ய மாட்டார்கள் என நம்புகிறேன் என்றார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Home Minister Amit shah, Karnataka, Maharashtra, Supreme court