பாஜகவின் தலைவராக அமித்ஷா நீடிப்பு

தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு புதிய தலைவர்கள் நியமனம் குறித்தும், விரைவில் நடைபெறவுள்ள 6 மாநில சட்டமன்ற தேர்தல் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

News18 Tamil
Updated: June 13, 2019, 7:57 PM IST
பாஜகவின் தலைவராக அமித்ஷா நீடிப்பு
அமித் ஷா
News18 Tamil
Updated: June 13, 2019, 7:57 PM IST
பாஜக-வில் இரட்டைப் பதவியை ஒருவர் வகிக்க முடியாது என்பதால் உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு பதிலாக புதிய தேசிய தலைவர் நியமிக்கப்படுவார் என எதிர்பார்த்த நிலையில், மகராஷ்டிரா உள்ளிட்ட ஆறு மாநில தேர்தல் வரை மேலும் சில மாதங்களுக்கு அமித் ஷாவே அப்பதவியில் தொடர்வாரென தகவல் வெளியாகியுள்ளது.

பாஜக-வை பொருத்தவரை எவரும் இரட்டை பதவிகளை ஒரே நேரத்தில் வகிக்க முடியாது. அந்த அடிப்படையில்தான் 2014ம் ஆண்டில் பாஜக தலைவராக இருந்த ராஜ்நாத் சிங், மத்திய அமைச்சராக பதவியேற்ற ஒன்றரை மாதங்களிலேயே தேசியத் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்.

குஜராத் மற்றும் உத்தரப்பிரதேச தேர்தல்களில் வெற்றியை பெற்றுத் தந்ததால் கட்சியில் செல்வாக்கு பெற்றிருந்த அமித் ஷாவை பாஜக மத்திய குழு, தேசிய தலைவராக நியமித்தது.

குறுகிய காலத்தில் 10 கோடி உறுப்பினர்களை அமித் ஷா சேர்த்தார். மேலும் மகராஷ்டிரா, ஹரியானா, காஷ்மீர், ஜார்க்கண்ட் மாநில தேர்தல்களில் பாஜக வெற்றி பெற்றதற்கு அமித் ஷா காரணமாக இருந்தார்.

அதைத் தொடர்ந்து 2016 ஜனவரியில் நடைபெற்ற உட்கட்சித் தேர்தலில் போட்டியின்றி தலைவராக அமித் ஷா தேர்ந்தெடுக்கப்பட்டார். பாஜக தலைவரின் பதவிக்காலம் மூன்று ஆண்டுகள் மட்டுமே என்பதால் அமித் ஷாவின் பதவிக்காலம் 2019 ஜனவரியில் முடிவடைந்தது.

எனினும் நாடாளுமன்ற தேர்தல் வெற்றியை கருதி அமித் ஷாவே தலைவராக தொடர்வதென முடிவெடுக்கப்பட்டது.

பாஜக தலைவரக்ள் ஆலோசனைக் கூட்டம்

இந்நிலையில் முதல் முறையாக மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு மத்திய உள்துறை அமைச்சரகாகவும் பதவியேற்றார். இந்த பரபரப்பான சூழலில் டெல்லி பாஜக தலைமை அலுவலகத்தில் பாஜக மாநிலத் தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம், அமித் ஷா தலைமையில் நடந்தது.

அதில் தேசிய தலைவர் மற்றும் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு புதிய தலைவர்கள் நியமனம் குறித்தும், விரைவில் நடைபெறவுள்ள 6 மாநில சட்டமன்ற தேர்தல் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

இந்நிலையில் மகராஷ்டிரா, பீகார், டெல்லி, ஜார்க்கண்ட் உள்ளிட்ட 6 மாநில சட்டமன்ற தேர்தல்கள் வரை அமித்ஷாவே தலைவராக தொடரவேண்டும் என முடிவெடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் கட்சியின் உறுப்பினர் எண்ணிக்கை 11 கோடியில் இருந்து 20 கோடியாக உயர்த்தவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அப்பொறுப்பு பாஜக துணைத் தலைவரான சிவ்ராஜ் சிங் சவுகான் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.

இக்கூட்டத்தில், கட்சியில் உறுப்பினர்களை சேர்ப்பது குறித்து விவாதிக்கப்பட்டதாக பாஜக தமிழக தலைவர் தமிழிசை தெரிவித்தார்.

புதிய உறுப்பினர் சேர்க்கைக்குப் பிறகே இந்த ஆண்டு இறுதியில் உட்கட்சித் தேர்தல்கள் நடைபெறும் என்றும், 2020 துவக்கத்தில் தேசியத் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடக்கும் என்றும் பாஜக மூத்த தலைவர் புபேந்திர யாதவ் கூறியுள்ளார்.

First published: June 13, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...