ஹோம் /நியூஸ் /இந்தியா /

இந்தி மொழியில் மருத்துவக் கல்வி திட்டம்... அமித்ஷா தொடங்கி வைத்து பெருமிதம்!

இந்தி மொழியில் மருத்துவக் கல்வி திட்டம்... அமித்ஷா தொடங்கி வைத்து பெருமிதம்!

அமித்ஷா

அமித்ஷா

medical education program in Hindi | நாட்டில் முதல் முறையாக மத்திய பிரதேசத்தில் இந்தி மொழியில் மருத்துவ கல்வி பயிலும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை தொடங்கி வைத்த அமைச்சர் அமித்ஷா, இந்நாள் இந்திய கல்வித்துறைக்கு மிக முக்கியமான நாள் என்று பெருமிதம் தெரிவித்தார்.

மேலும் படிக்கவும் ...
 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Madhya Pradesh, India

  நாட்டில் முதல் முறையாக மத்திய பிரதேசத்தில் இந்தி மொழியில் மருத்துவ கல்வி பயிலும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை தொடங்கி வைத்த அமைச்சர் அமித்ஷா, இந்நாள் இந்திய கல்வித்துறைக்கு மிக முக்கியமான நாள் என்று பெருமிதம் தெரிவித்தார்.

  மத்தியப்பிரதேச மாநிலம் போபாலில் நடந்த நிகழ்ச்சியில் இந்தியில் மொழி பெயர்க்கப்பட்ட முதலாம் ஆண்டு எம்.பி.பி.எஸ் பாட புத்தகங்களை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வெளியிட்டு, இந்தியில் எம்.பி.பி.எஸ். படிக்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

  இதன்மூலம் மத்திய பிரதேசத்தில் 13 அரசு மருத்துவ கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு உடற்கூறியல், உடலியல், உயிர் வேதியியல் ஆகிய 3 இளநிலை மருத்துவப் படிப்புக்கான பாடங்கள் இந்தியில் கற்பிக்கப்படவுள்ளன.

  இதையும் படிங்க : ”சல்மான்கானுக்கு போதைப்பொருள் பழக்கம்.. நடிகைகளை கடவுள் ஒருவரே அறிவார்'': சர்ச்சையை ஏற்பத்தி பாபா ராம்தேவ் பேச்சு

  இந்நிகழ்ச்சியில் பேசிய அமித்ஷா, “இந்தியில் மருத்துவ படிப்பை தொடங்கும் நாட்டின் முதல் மாநிலமாக மத்திய பிரதேசம் மாறியுள்ளது. இனி வரும் நாட்களில் வரலாறு எழுதப்படும் போதெல்லாம் இந்த நாள் பொன் எழுத்துக்களால் எழுதப்படும். இனி கிராமப்புற மாணவர்களுக்கு ஆங்கில மொழி தெரியவில்லை என்ற எந்தவித தாழ்வு மனப்பான்மையும் இருக்காது. அவர்கள் தங்கள் சொந்த மொழியில் பெருமையுடன் படிக்கலாம். தேசிய கல்வி கொள்கையின் ஒரு பகுதியாக இந்தியில் எம்.பி.பி.எஸ் படிப்பு தொடங்கப்பட்டுள்ளது.

  விரைவில் பிற மொழிகளிலும் இது தொடங்கப்படும். மேலும் 8 மொழிகளில் தொழில்நுட்ப மற்றும் மருத்துவ கல்வியை தொடங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. நாட்டில் 387 மருத்துவ கல்லூரிகளில் மொத்தம் 51,000 இடங்கள் இருந்தன. இப்போது 596 மருத்துவ கல்லூரிகளில் கூடுதலாக 89,000 இடங்கள் உள்ளன. நாட்டில் முன்பு 16 இந்திய தொழில்நுட்ப நிறுவனங்கள் இருந்தன. இப்போது எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது. இந்திய மேலாண்மை நிறுவனங்களின்(ஐஐஎம்) எண்ணிக்கை 13 முதல் 20 ஆகவும்,  பல்கலைக்கழகங்களின் எண்ணிக்கை 723-லிருந்து 1043 ஆகவும், இந்திய நிறுவனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. 9 முதல் 25 வரை தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் (ஐஐஐடி) உருவாகியுள்ளது” என்று பேசினார்.

  இந்நிகழ்ச்சியில், மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், மருத்துவ கல்வி அமைச்சர் விஸ்வாஸ் சாரங் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

  பிற மொழிகளிலும் பயிற்றுவிக்கப்படுமா? :

  இந்தியாவில் பல ஆண்டுகளாக மருத்துவக்கல்வி ஆங்கிலத்தில் மட்டுமே பயிற்றுவிக்கப்பட்டு வருகிறது. இந்த புதிய திட்டம் மூலம் மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளை இந்தியில் கற்கவோ, கற்பிக்கவோ முடியாது என்ற எண்ணத்தை இது மாற்றும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு இந்தி திணிப்பில் ஈடுபடுவதாக, தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநில முதலமைச்சர்கள் குற்றம்சாட்டியுள்ள நிலையில், தமிழ் உள்ளிட்ட பிற மொழிகளிலும் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என கூறப்படுகிறது.

  இதையும் படிங்க : பெண்ணை கடித்துக் குதறிய பிட்புல் நாய்.. உடம்பெல்லாம் 50 தையல்கள்! பகீர் சம்பவம்!

  அவ்வாறு பிற தாய்மொழிகளிலும் மருத்துவ கல்வி பயிற்றுவிக்கப்படுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

  Published by:Karthi K
  First published:

  Tags: Amit Shah, Madhya pradesh, MBBS