ஹோம் /நியூஸ் /இந்தியா /

குஜராத்தில் முழு பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சி அமைப்போம் - அமித் ஷா நம்பிக்கை

குஜராத்தில் முழு பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சி அமைப்போம் - அமித் ஷா நம்பிக்கை

அமித்ஷா நியூஸ் 18 சேனலுக்கு நேர்க்காணல்

அமித்ஷா நியூஸ் 18 சேனலுக்கு நேர்க்காணல்

AmitShahToNews18 : குஜராத் சட்டமன்றத்தேர்தலில் பல சாதனைகளை பாஜக தகர்க்கும் என நியூஸ் 18 தொலைக்காட்சிக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் மத்திய அமைச்சர் அமித் ஷா திட்டவட்டமாக தெரிவித்தார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Gujarat, India

  குஜராத் சட்டமன்ற தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற்றும் முழு பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சி அமைப்போம் என உள்துறை அமைச்சர் அமித் ஷா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

  குஜராத் சட்டப்பேரவைக்கு டிசம்பர் ஒன்று மற்றும் ஐந்தாம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது.

  இந்நிலையில் குஜராத் அதிவேஷன் (Gujarat Adhiveshan) என்ற தலைப்பில் நியூஸ்18 குழுமம் சார்பில் அகமதாபாத்தில் சிறப்பு கலந்துரையாடல் நடைபெற்றது.

  இதில் நெட்வொர்க் 18 மேலாண் இயக்குநர் மற்றும் முதன்மை செய்தி ஆசிரியர் ராகுல் ஜோஷியிடம் கலந்துரையாடிய உள்துறை அமித் ஷா, குஜராத்தில் முழு பெரும்பான்மையுடன் பாஜக மீண்டும் ஆட்சியமைக்கும் என்றார். மேலும், இதுவரை இல்லாத அளவு இடங்களையும் கைப்பற்றும் என்றார்.

  இதையும் படிக்க : கட்டாய மதமாற்றம் தனிநபர் மத சுதந்திரத்தை பாதிக்கிறது - உச்சநீதிமன்றம் கருத்து

  மேலும் பாஜக இதுவரை அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளது என்ற அமித் ஷா, மக்களுக்கு அதிகாரம் வழங்குதே தங்களது நோக்கம் என்றார்.

  இமாச்சலப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் குறித்து பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, முதல்வர் ஜெய்ராம் தாக்கூர் கட்சியை வழிநடத்துகிறார், பாஜக அவரது தலைமையில் போட்டியிடுகிறது என்றார். ஹிமாச்சலில் நாங்கள் ஆட்சி அமைத்தால் அவர் முதலமைச்சராக நீடிப்பார். குஜராத் மற்றும் இமாச்சல பிரதேச தேர்தல்கள் கர்நாடகாவில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

  Published by:Lakshmanan G
  First published:

  Tags: Assembly Election 2022