• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • மத்திய அரசு மிகச்சிறந்த பாதுகாப்பு கொள்கையை வகுத்துள்ளது- அமித்ஷா பெருமிதம்

மத்திய அரசு மிகச்சிறந்த பாதுகாப்பு கொள்கையை வகுத்துள்ளது- அமித்ஷா பெருமிதம்

அமித் ஷா

அமித் ஷா

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, குடியுரிமை சட்டதிருத்தத்தை எதிர்ப்பதன் மூலம், வன்முறைக்கு வழிவகுப்பதாக அமித்ஷா குற்றம்சாட்டியுள்ளார்.

  • Share this:
    இந்தியா மிகச்சிறப்பான பாதுகாப்பு கொள்கையை வகுத்து செயல்படுத்தி வருவதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா பெருமிதம் தெரிவித்துள்ளார். 

    மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். முன்னதாக கொல்கத்தா விமான நிலையம் முன்பு திரண்ட இந்திய மாணவர் சங்கம் உள்ளிட்ட இடதுசாரி அமைப்புகளை சேர்ந்தோர், அமித்ஷா வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து முழக்கங்களை எழுப்பினர். ”GO BACK AMIT SHAH” என்ற பதாகைகளுடன் போராட்டம் நடத்திய அவர்கள், கருப்பு பலூன்களை பறக்க விட்டும் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

    இதேபோல் மேற்கு வங்கத்தின் பல்வேறு பகுதிகளிலும் அமித்ஷா வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து இடதுசாரி கட்சிகளை சேர்ந்தவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

    கொல்கத்தா


    இதனை தொடர்ந்து ராஜர்ஹாட் பகுதியில் கட்டப்பட்டுள்ள தேசிய பாதுகாப்புப்படை வளகாத்தை அமித்ஷா திறந்து வைத்தார். அப்போது அமித்ஷா முன்னிலையில் தேசிய பாதுகாப்புப்படையினர் பாதுகாப்பு ஒத்திகையை நிகழ்த்தினர்.

    அப்போது பேசிய அமித்ஷா,” பயங்கரவாதத்தை சகித்துத்கொள்ளும் பேச்சுக்கே இடமில்லை. மத்திய அரசு மிக சிறப்பான பாதுகாப்பு கொள்கையை வகுத்து செயல்படுத்தி வருகிறது. பயங்கரவாத முகாம்களை அழிக்கும் வகையில், துல்லியத் தாக்குதல் நடத்தும் அமெரிக்கா, இஸ்ரேல் போன்ற நாடுகளின் பட்டியலில் தற்போது இந்தியா இணைந்துள்ளது” என்று பெருமிதமாக தெரிவித்தார்.

    பின்னர் ஷாகிர் மினார் பகுதியில் பாஜக சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், Aar Noi Annay அதாவது அநியாயத்தை அனுமதிக்க மாட்டோம் என்ற பெயரிலான பரப்புரை இயக்கத்தை தொடங்கி வைத்து அமித்ஷா பேசினார். அப்போது, 2021-ம் ஆண்டு நடைபெற உள்ள மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று பாஜக ஆட்சியமைக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

    மேலும் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, குடியுரிமை சட்டத்திருத்தத்தை எதிர்ப்பதன் மூலம், வன்முறைக்கு வழிவகுப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார். சிஏஏ குறித்து சிறுபான்மை மக்கள் தவறாக வழிநடத்தப்படுவதாகவும் அவர் கூறினார். மேற்கு வங்கத்திற்கு அநீதி இழைக்கப்படுவதை சகித்துத்கொள்ள முடியாது எனவும் மேற்கு வங்க மாநில அரசை பாஜகவிடம் ஒப்படைத்தால், ஒளிரும் வங்கத்தை படைப்போம் என்றும் கூறினார்.

    Also...

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: