காஷ்மீர் பரபரப்பு! தேசிய பாதுகாப்பு ஆலோசகர், உள்துறைச் செயலாளருடன் அமித்ஷா ஆலோசனை

காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டப் பிரிவு 35-ஏ மற்றும் 370 வது பிரிவை நீக்குவதற்கு மத்திய அரசு திட்டம் வைத்துள்ளது.

news18
Updated: August 4, 2019, 3:18 PM IST
காஷ்மீர் பரபரப்பு! தேசிய பாதுகாப்பு ஆலோசகர், உள்துறைச் செயலாளருடன் அமித்ஷா ஆலோசனை
அமித் ஷா
news18
Updated: August 4, 2019, 3:18 PM IST
காஷ்மீர் விவகாரம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், உள்துறைச் செயலாளர் ராஜீவ் கவுபா உள்ளிட்ட உயர் அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

அமர்நாத் யாத்திரை கடந்த ஜுன் மாதம் 30-ம் தேதி தொடங்கி, ஆகஸ்ட் 15 வரை நடைபெறுகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பஹல்காம், பால்தால் பகுதியில் பெய்த தொடர் மழை காரணமாக, அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. யாத்ரீகர்கள் செல்லும் பாதையில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் இருப்பதால், ஆகஸ்ட் 4 வரை யாத்திரை ஒத்திவைக்கப்பட்டது.

ஜம்மு காஷ்மீர்மேலுர், காஷ்மீரிலுள்ள சுற்றுலாப் பயணிகள் உடனடியாக மாநிலத்தை விட்டு வெளியேறவேண்டும் என்று உள்துறை அமைச்சகம் எச்சரித்துள்ளது. மேலும், காஷ்மீர் மாநிலம் முழுவதும் கூடுதலாக 35,000 ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில், காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டப் பிரிவு 35-ஏ மற்றும் 370 வது பிரிவை நீக்குவதற்கு மத்திய அரசு திட்டம் வைத்துள்ளது. அதன் காரணமாகத்தான் ஏராளமான ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர் என்று அம்மாநிலத்தின் எதிர்கட்சித் தலைவர்கள் குற்றம்சாட்டிவருகின்றனர்.

அதனால், காஷ்மீரில் ஒரு அசாதாரண நிலை நிலவுகிறது. இந்தநிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், உள்துறைச் செயலாளர் ராஜீவ் கவுபா, ரா உளவு அமைப்பின் உயர் அதிகாரி சமன்ட் கோயல், ஐபியின் தலைவர் அரவிந்த் குமார் ஆகியோருடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

Loading...

Also see:

First published: August 4, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...