சீன விவகாரம் குறித்து பேச ராகுல் காந்திக்கு உரிமை இல்லை - அமித் ஷா காட்டம்

சீன விவகாரம் குறித்து கேள்வி எழுப்ப ராகுல் காந்திக்கும், காங்கிரஸுக்கும் உரிமை இல்லை என்று மத்திய அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

சீன விவகாரம் குறித்து பேச ராகுல் காந்திக்கு உரிமை இல்லை - அமித் ஷா காட்டம்
அமித் ஷா
  • Share this:
கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நீண்ட நாள்களுக்குப் பிறகு நியூஸ் 18 குழும செய்தித் தலைமை ஆசிரியர் ராகுல் ஜோஷிக்கு பிரத்யேகப் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், "சீனாவுடனான எல்லைப் பிரச்னை தொடர்பாக குரல் எழுப்புவதற்கு ராகுல் காந்திக்கும், அவரது கட்சிக்கும் எந்த உரிமையும் இல்லை. காங்கிரஸ் தலைவர்கள் தொடர்ந்து அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர். ராகுல் காந்தியிடம் அவருடைய குற்றச்சாட்டுகளை நிரூபிக்கும் வகையில் ஒரு தரவு கூட கிடையாது. அவர், தொடர்ந்து ஆதாரமற்ற அறிவிப்புகளை வெளியிடுகிறார். இந்த அறிவிப்புகளை வெளியிடுவதற்கு காங்கிரஸுக்கு எந்த உரிமையும் கிடையாது.

காங்கிரஸ் கட்சி ஆட்டிசியிலிருந்துபோது எவ்வளவு இந்தியப் பகுதிகள் சீனாவுக்கு விட்டுகொடுத்தது என்பதை நாட்டு மக்களுக்கு அவர்கள் கொடுக்கவேண்டும். 1962-ம் ஆண்டு ராகுல் காந்தியின் கொள்ளுதாத்தா பிரதமராக இருந்தபோது எவ்வளவு பகுதிகள் விட்டுக்கொடுக்கப்பட்டன என்று கேட்கிறேன்’ என்று தெரிவித்தார்.


சமீபத்தில், இந்திய - சீன விவகாரம் குறித்து பேசிய ராகுல் காந்தி, ‘நரேந்திர மோடி அரசு இந்தியாவை பலவீனப்படுத்தியுள்ளது. இந்தியப் பகுதிக்குள் நுழைந்து இந்திய வீரர்களை கொல்லும் தைரியம் சீனாவுக்கு வந்துள்ளது. காங்கிரஸ் ஆட்சியின்போது, சீன வீரர்கள் இந்திய எல்லைப் பகுதியிலிருந்து விரட்டியடிக்கப்பட்டனர். அதற்கு 15 நிமிடங்கள் கூட தேவைப்படவில்லை’ என்று விமர்சனம் செய்திருந்தார்.
First published: October 18, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading