Home /News /national /

அமித் ஷா கண்காணிப்பில் 30,000 கிலோ போதைப் பொருட்களை அழித்த என்சிபி!

அமித் ஷா கண்காணிப்பில் 30,000 கிலோ போதைப் பொருட்களை அழித்த என்சிபி!

அமித் ஷா

அமித் ஷா

உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் கண்காணிப்பின் கீழ், கைப்பற்றப்பட்ட 30,000 கிலோவுக்கும் அதிகமான போதைப்பொருட்களை என்சிபி அழித்தது.

    போதைப்பொருள்கள் இளம் தலைமுறையினரை மோசமாக பாதிப்பதாகவும், கரையான்களைப் போல அவர்களுக்கு தீங்கு விளைவிப்பதாகவும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

    பஞ்சாப் ராஜ் பவனில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் தேசிய பாதுகாப்பு குறித்த இரண்டு நாள் போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகத்தின் (என்சிபி) தேசிய மாநாட்டை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைத்தார்.

    தொடர்ந்து பேசிய அமித் ஷா கூறும்போது, ஆரோக்கியமான சமுதாயம் மற்றும் வளமான தேசத்தின் நோக்கத்தை அடைய, சகிப்புத்தன்மை இல்லாத கொள்கை அவசியம். போதைப்பொருள் வர்த்தகத்தில் இருந்து பெறப்படும் அழுக்குப் பணம் நாட்டுக்கு எதிரான நடவடிக்கைகளில் பயன்படுத்தப்படுவதால் பாதுகாப்புக் கண்ணோட்டத்தில் இது முக்கியமானது.

    2014ம் ஆண்டில் நரேந்திர மோடி பிரதமரானபோது, ​​இந்திய அரசு போதைப்பொருளுக்கு எதிரான பூஜ்ஜிய சகிப்புத்தன்மை கொள்கையை ஏற்றுக்கொண்டது. விரைவாகவும் சரியான திசையிலும் முன்னேறிய போதைப்பொருட்களுக்கு எதிரான போராட்டம் முடிவுகளைக் காட்டத் தொடங்கியது.

    போதைப்பொருள்கள் இளம் தலைமுறையினரை மோசமாக பாதிக்கிறது என்றும், கரையான்களைப் போல அவர்களுக்கு தீங்கு விளைவிப்பதாகவும் கூறிய உள்துறை அமைச்சர், இந்தப் பேரிடரை ஒழிப்பதில் அரசு உறுதியாக இருப்பதாக வலியுறுத்தினார். போதைப்பொருள் உட்கொள்பவர்கள் மீது மட்டுமல்ல, சமூகம், பொருளாதாரம் மற்றும் நாட்டின் பாதுகாப்பு ஆகியவற்றிலும் மோசமான தாக்கத்தை ஏற்படுத்துவதாக அவர் கூறினார். "நாம் அதை முழுமையாக அகற்ற வேண்டும்," என்று அவர் கூறினார்.

    இதனிடையே, உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் கண்காணிப்பின் கீழ், கைப்பற்றப்பட்ட 30,000 கிலோவுக்கும் அதிகமான போதைப்பொருட்களை என்சிபி அழித்தது. அந்த வகையில், டெல்லியில் 19,320 கிலோவும், சென்னையில் 1,309 கிலோவும், கவுகாத்தியில் 6,761 கிலோவும், கொல்கத்தாவில் 3,077 கிலோவும் போதைப்பொருள் அழிக்கப்பட்டது.
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Amith shah

    அடுத்த செய்தி