மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மூன்று நாள் பயணமாக இன்று காஷ்மீர் செல்கிறார்.
காஷ்மீரில் கடந்த சில நாட்களாக பொதுமக்கள் மற்றும் வெளிமாநில தொழிலாளர்கள் கொல்லப்படுவது அதிகரித்து வருகிறது. இந்நிலையில், அமித் ஷா மூன்று நாள் பயணமாக காஷ்மீர் செல்கிறார். இந்த பயணத்தின் போது ஸ்ரீநகரில் இருந்து ஷார்ஜாவிற்கு நேரடி விமான சேவையை தொடங்கி வைக்கிறார். மேலும், தீவிரவாதிகள் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறுகிறார்.
அதைத்தொடர்ந்து ஒருங்கிணைந்த கட்டளை மையத்தின் ஆலோசனை கூட்டத்திலும் பங்கேற்க உள்ளார். ஸ்ரீநகரில் அமித் ஷா தங்க உள்ள ஆளுநர் மாளிகையை சுற்றி 20 கிலோ மீட்டர் சுற்றளவில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதனிடையே, ரஜெளரி மாவட்டத்தில் உள்ளூர் இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் அடங்கிய பாதுகாப்பு குழுக்களை அமைத்து அவர்களுக்கு துப்பாக்கிகளை கையாள்வது குறித்து ராணுவத்தினர் பயிற்சியளிக்கத் தொடங்கியுள்ளனர்.
காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அதிகார அரசியலமைப்பு சட்டம் ரத்து செய்யப்பட்டதற்கு பிறகு முதன்முறையாக அமித்ஷா காஷ்மீர் செல்கிறார். இதையடுத்து ஸ்ரீநகரில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
Published by:Ramprasath H
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.