Exclusive: ஊரடங்குக்கு முன்பு புலம்பெயர் தொழிலாளர்களை அவர்களது மாநிலங்களுக்கு அனுப்பாதது ஏன்? அமித்ஷா விளக்கம்

ஊரடங்குக்கு முன்னதாக புலம்பெயர் தொழிலாளர்களை அவர்களது மாநிலங்களுக்கு அனுப்பியிருந்தால் அந்த மாநிலங்களுக்கு பெரும் பிரச்னையாக அமைந்திருக்கும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். 

Exclusive: ஊரடங்குக்கு முன்பு புலம்பெயர் தொழிலாளர்களை அவர்களது மாநிலங்களுக்கு அனுப்பாதது ஏன்? அமித்ஷா விளக்கம்
அமித் ஷா
  • Share this:
பிரதமர் மோடியின் இரண்டாவது கட்ட ஆட்சியின் முதல் ஆண்டு நிறைவுபெற்றுள்ள நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நியூஸ்18-க்கு சிறப்பு பேட்டியளித்துள்ளார். அந்தப் பேட்டியில், ‘ஊரடங்குக்கு முன்னதாக புலம்பெயர் தொழிலாளர்களை அவர்களது சொந்த மாநிலங்களுக்கு அனுப்பியிருந்தால், அது மாநில அரசுகளுக்கு பெரும் பிரச்னைகளாக அமைந்திருக்கும். அந்த நேரத்தில் மாநில அரசுகளிடம் போதிய சோதனை செய்யும் வசதிகளும், தனிமைப்படுத்தும் வசதிகளும் கிடையாது. புலம்பெயர் தொழிலாளர்களை அவர்கள் சொந்த மாநிலங்களுக்கு அனுப்புவதற்கு முன்னதாக முதலில் மாநிலங்களில் மருத்துவக் கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும் என்று நாங்கள் விரும்பினோம். புலம்பெயர் தொழிலாளர்களுக்காக மோடி அரசு பேருந்துகள் மற்றும் ரயில்களை ஏற்பாடு செய்துள்ளது.

இதுவரையில் 55 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். புலம்பெயர் தொழிலாளர்கள் அவர்களது சொந்த ஊர்களுக்குச் செல்வதற்கு ரயில்வே அமைச்சகம் உதவியுள்ளது. புலம்பெயர் தொழிலாளர்கள் பெரும்பான்மையானவர்கள் அவர்களது தனிமைப்படுத்தும் காலத்தை முடித்து தற்போது அவர்களது குடும்பத்துடன் சேர்ந்து வாழத் தொடங்கியுள்ளனர்.

புலம்பெயர் தொழிலாளர்களுக்காக சிறப்பு ரயில்கள் மே 1-ம் தேதி முதல் இயக்கப்பட்டன. ஆனால், அதற்கு முன்னதாக ஏப்ரல் 20-ம் தேதியிலிருந்தே அருகிலுள்ள பகுதிகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் அவர்களது ஊர்களுக்கு அனுப்பப்பட்டனர். 41 லட்சம் தொழிலாளர்கள் பேருந்துகள் மூலம் அனுப்பப்பட்டுள்ளனர். 4000 ரயில்கள் புலம்பெயர் தொழிலாளர்களுக்காக இயக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் பொறுமையை இழந்த தொழிலாளர்கள் அவர்களது மாநிலங்களுக்கு நடக்கத் தொடங்குகின்றனர். எல்லா செலவுகளையும் இந்திய ரயில்வே ஏற்றுக்கொண்டுள்ளது. இந்த நேரத்தில் இரண்டு கோடி மக்களுக்கு உணவு அளிக்கப்பட்டுள்ளது’ என்று தெரிவித்துள்ளார்.









 

Also see:
First published: June 1, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading