ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இயல்பு நிலை திரும்பிய பிறகு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கப்படும் என்று மாநிலங்களவையில் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370-வது சட்டப் பிரிவு குடியரசுத் தலைவர் ஒப்புதலுடன் நீக்கப்பட்டது என்று மாநிலங்களவையில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார். மேலும், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை, இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கும் மசோதாவையும் மாநிலங்களவையில் தாக்கல் செய்தார் அமித்ஷா.
அந்த மசோதா மீது மாநிலங்களவை உறுப்பினர்கள் விவாதம் நடத்தினர். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை யூனியன் பிரதேசமாக மாற்றியதற்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கடும் கண்டனம் தெரிவித்தார்.
அதற்கு பதிலளித்த அமித்ஷா, ‘ஜம்மு காஷ்மீர் எத்தனை காலத்துக்கு யூனியன் பிரதேசமாக நீடிக்கும் என்று பல எம்.பிக்கள் கேள்வி எழுப்பினர். காஷ்மீரில் அமைதி திரும்பியுடன் சரியான நேரம் வந்தவுடன் காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து திரும்ப அளிக்கப்படும் என்று உறுதியளிக்கிறேன். இது நடைபெறுவதற்கு மிக நீண்ட காலம் தேவைப்படும். ஆனால், அது நிறைவேறும்’ என்று தெரிவித்தார்.
Also see:
Published by:Karthick S
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.