எஸ்.பி.ஜி பாதுகாப்பு யாருக்கெல்லாம் வழங்கப்படும்? மக்களவையில் விளக்கமளித்த அமித்ஷா

எஸ்.பி.ஜி பாதுகாப்பு யாருக்கெல்லாம் வழங்கப்படும்? மக்களவையில் விளக்கமளித்த அமித்ஷா
அமித் ஷா
  • News18
  • Last Updated: November 27, 2019, 7:37 PM IST
  • Share this:
எஸ்.பி.ஜி பாதுகாப்பு பிரதமருக்கும் அவருடன் வசிக்கும் குடும்பத்தினருக்கு மட்டுமே வழங்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்றத்தில் விளக்கமளித்துள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி குடும்பத்தைச் சேர்ந்த சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோருக்கு வழங்கப்பட்ட எஸ்.பி.ஜி பாதுகாப்பு சமீபத்தில் திரும்பப் பெறப்பட்டது. மத்திய அரசின் இந்தச் செயலுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துவந்தன. இந்தநிலையில்,

மக்களவையில் எஸ்.பி.ஜி பாதுகாப்பு திருத்த மசோதா தொடர்பாக விவாதம் எழுந்தது. அந்த விவாதத்தில் பேசிய அமித்ஷா, ‘எஸ்.பி.ஜி பாதுகாப்பு திருத்த மசோதா குறித்து பேச வந்துள்ளேன். இந்தச் சட்டத்தின் கீழ், எஸ்.பி.ஜி பாதுகாப்பு பிரதமருக்கும் பிரதமர் இல்லத்தில் அவருடன் வசிக்கும் குடும்பத்தினருக்கு மட்டுமே வழங்கப்படும். அதேபோல, அரசு வழங்கும் இல்லத்தில் வசிக்கும் முன்னாள் பிரதமருக்கும் அவருடைய குடும்பத்தினருக்கும் ஐந்து ஆண்டுகளுக்கு எஸ்.பி.ஜி பாதுகாப்பு வழங்கப்படும்’ என்று விளக்கம் அளித்தார்.


Also see:

First published: November 27, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்