• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • முழு மருத்துவப் பரிசோதனைக்குப் பின் உள்துறை அமைச்சர் அமித்ஷா வீடு திரும்பினார்..

முழு மருத்துவப் பரிசோதனைக்குப் பின் உள்துறை அமைச்சர் அமித்ஷா வீடு திரும்பினார்..

உள்துறை அமைச்சர் அமித் ஷா

உள்துறை அமைச்சர் அமித் ஷா

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஆறு நாட்டுகளுக்குப் பின் வீடு திரும்பினார்.

  • Share this:
    சிகிச்சைக்காக எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

    கொரோனா வைரஸ் தாக்கத்தால் இந்தியாவில் மக்கள் பிரதிநிதிகள் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் இந்தியாவின் உள்துறை அமைச்சரான அமித்ஷாவிற்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அண்மையில் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்ட இவர், அதற்கு பிந்தைய சிகிச்சைக்காக கடந்த ஆகஸ்ட் 18-ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். சிகிச்சை முடிந்து ஆகஸ்ட் 31-இல் வீடு திரும்பினார்.

    மேலும் படிக்க...வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வது தொடர்பாக தலைமை செயலாளர் அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை



    மேலும், நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்பதற்கு முன்பு, முழு உடல் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்வதற்காக எய்ம்ஸ் மருத்துவமனையில் கடந்த 12-ம் தேதி மீண்டும் அனுமதிக்கப்பட்டாா். இந்நிலையில், உரிய பரிசோதனைகள் முடிந்த பின் நேற்று மாலை வீடு திரும்பினார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: