• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • எனக்கு எந்த வியாதியும் இல்லை... நலமாக இருக்கிறேன்...! உள்துறை அமைச்சர் அமித்ஷா

எனக்கு எந்த வியாதியும் இல்லை... நலமாக இருக்கிறேன்...! உள்துறை அமைச்சர் அமித்ஷா

அமித் ஷா  (கோப்பு படம்)

அமித் ஷா (கோப்பு படம்)

சமூக வலைதளங்களில் அமித்ஷாவின் உடல்நிலை குறித்து சில தகவல்கள் பரவிய நிலையில், இது தொடர்பாக அவர் விளக்கம் அளித்துள்ளார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
    உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் உடல்நிலை தொடர்பாக ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் சில தகவல்கள் பரவியது. இந்த நிலையில் இது தொடர்பாக அவர் அளித்துள்ள விளக்கத்தில், “கொரோனா தொற்றை எதிர்த்து நாடு போராடி வரும் நிலையில், உள்துறை அமைச்சர் என்ற முறையில் நான் கடுமையாக உழைத்துக்கொண்டிருக்கிறேன். சமூக வலைதளங்களில் பரவும் இது போன்ற தகவல்களை நான் கண்டுக்கொள்வதில்லை.



    ஆனால், லட்சக்கணக்கான எனது கட்சித்தொண்டர்கள் மற்றும் நலம் விரும்பிகள், எனது நலன் குறித்து கவலைப்பட்டுள்ளனர். அதனை நான் ஒதுக்கிவிட முடியாது. அதனால், இந்த விளக்கத்தை நான் அளிக்கிறேன். நான் முழு உடல்நலத்துடன் உள்ளேன். எந்த நோயும் இல்லை” என்று தெரிவித்துள்ளார்.








    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




    Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankar
    First published: