ஹோம் /நியூஸ் /இந்தியா /

அன்றே கணித்தார் அமித்ஷா.. குஜராத்தில் வரலாற்று வெற்றி பெறுவோம் என பேச்சு! வைரலாகும் வீடியோ

அன்றே கணித்தார் அமித்ஷா.. குஜராத்தில் வரலாற்று வெற்றி பெறுவோம் என பேச்சு! வைரலாகும் வீடியோ

அமித்ஷா பேச்சு வைரல்

அமித்ஷா பேச்சு வைரல்

Gujarat election : குஜராத்தில் கடந்த 1985-ம் ஆண்டு வெற்றி பெற்ற காங்கிரஸ் எண்ணிக்கையை முறியடித்து பாஜக வரலாற்று வெற்றி பெற்றுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Gujarat, India

குஜராத் மாநிலத்தில் பாஜக வரலாற்று வெற்றி பெற்ற நிலையில், தேர்தலுக்கு முன் மத்திய அமைச்சர் அமித்ஷா பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

குஜராத் மாநிலத்தில் உள்ள 182 சட்டசபை தொகுதிகளுக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. முதற்கட்டமாக டிசம்பர் 1ஆம் தேதி நடைபெற்ற தேர்தலில், 63 சதவீத வாக்குகளும், 5ஆம் தேதி நடைபெற்ற இரண்டாம் கட்டத் தேர்தலில் 65 சதவீத வாக்குகளும் பதிவாகின.

மொத்தம்  1,621 வேட்பாளர்கள் போட்டியிட்ட இந்த தேர்தலில், சராசரியாக 64 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. வாக்குப்பதிவுக்கு பிறகு சீலிடப்பட்ட மின்னணு இயந்திரங்கள், பாதுகாப்பான இடங்களில் வைக்கப்பட்டுள்ள நிலையில், இன்று வாக்கு எண்ணிக்கை காலையில் தொடங்கியதில் இருந்தே பாஜக முன்னிலை வகித்து வந்தது. இதன்மூலம் குஜராத்தில் வரலாற்று வெற்றியை பதிவு செய்து 7வது முறையாக பாஜக ஆட்சி அமைக்கிறது என உறுதி செய்யப்பட்டது.

இந்த நிலையில்  தேர்தலுக்கு முன்  நியூஸ் 18 நேர்காணில் மத்திய அமைச்சர் அமித்ஷா பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.  அதில், தாங்கள் குஜராத்தில் அதிக எண்ணிக்கையுடனும், மக்களின் பேராதரவுடனும் வரலாற்று வெற்றி பெறுவோம் என தெரிவித்திருந்தார். இந்த வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

' isDesktop="true" id="852115" youtubeid="cynvjPDJoMU" category="national">

மொத்தமுள்ள 182 தொகுதிகளில் 159-ல் பாஜக முன்னிலை பெற்றுள்ளது. குஜராத்தில் 1985-ம் ஆண்டு 149 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றிருந்தது. இந்த சாதனையை முறியடித்து தற்போது பாஜக வரலாற்று வெற்றி பெற்றுள்ளது.

First published:

Tags: Amit Shah, Amit Shah To News 18, Gujarat, Gujarat Assembly Election