விமானப்படை தாக்குதல் குறித்து உண்மையை உடைத்த அமித்ஷா !

விமானப்படை தாக்குதலில் கொல்லப்பட்டோர் எண்ணிக்கை குறித்து அரசு மற்றும் ராணுவ தரப்பில் அதிகாரப்பூர்வ எண்ணிக்கை வெளியிடப்படாத நிலையில் முதன் முறையாக பா.ஜ.க.வின் தேசியத் தலைவரான அமித் ஷா அதனை குறிப்பிட்டு பேசியுள்ளார்.

விமானப்படை தாக்குதல் குறித்து உண்மையை உடைத்த அமித்ஷா !
பா.ஜ.க. தலைவர் அமித்ஷா
  • News18
  • Last Updated: March 4, 2019, 8:08 AM IST
  • Share this:
ஜெய்ஷ் இ முகமது முகாம் மீதான தாக்குதலில் 250 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக பா.ஜ.க. தேசியத் தலைவர் அமித் ஷா பேசியுள்ளார்.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அமித்ஷா பங்கேற்று உரையாற்றினார். அப்போது புல்வாமா பயங்கரவாத தாக்குதலை குறிப்பிட்ட அமித்ஷா, தாக்குதல் நிகழ்ந்த 13 நாட்களுக்குள் இந்திய விமானப்படை பதில்  தாக்குதல் நடத்தியுள்ளது

ஜெய்ஷ்-இ-முகமது முகாம் மீது இந்திய விமானப்படை குண்டு வீசி தாக்குதல் நடத்தியதில்  250 தீவிரவாதிகளுக்கு மேல் அழிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார். கடந்த 5 ஆண்டுகளில் உரி மற்றும் புல்வாமா என இரு தாக்குதல்கள் நடைபெற்றதாகவும், இரண்டுக்குமே ராணுவம் எதிர்வினையாற்றியுள்ளதாகவும் அமித்ஷா குறிப்பிட்டார்.


விமானப்படை தாக்குதலில் கொல்லப்பட்டோர் எண்ணிக்கை குறித்து அரசு மற்றும் ராணுவ தரப்பில் அதிகாரப்பூர்வ எண்ணிக்கை வெளியிடப்படாத நிலையில் முதன் முறையாக ஆளும் பா.ஜ.க.வின் தேசியத் தலைவரான அமித்ஷா 250 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

Also Watch: யார் மானங்கெட்ட கூட்டணி? தினகரன் – ராஜேந்திர பாலாஜி மோதல்

First published: March 4, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading