ஏழு வருடத்தில் 3 மடங்கு அதிகமான அமித் ஷாவின் சொத்து மதிப்பு!

மேற்கு வங்கம் மற்றும் பீகாரில் இவர் மீது 4 குற்றவியல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஏழு வருடத்தில் 3 மடங்கு அதிகமான அமித் ஷாவின் சொத்து மதிப்பு!
அமித் ஷா வேட்பு மனு தாக்கல்
  • News18
  • Last Updated: March 31, 2019, 11:38 AM IST
  • Share this:
பாஜக தலைவர் அமித் ஷா சனிக்கிழமை காந்திநகர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். அதிலிருந்து இவரது சொத்து மதிப்பு கடந்த 7 வருடத்தில் 3 மடங்கு அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது.

அமித் ஷா தாக்கல் செய்த வேட்புமனுவில் அளித்த விவரங்களின் படி 2012-ம் ஆண்டு 11.79 கோடி ரூபாயாக இருந்த இவரது குடும்பத்தின் மொத்த அசையும் மற்றும் அசையா சொத்து மதிப்பு 38.81 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

கையில் 20,633 ரூபாய் ரொக்க பணமும், அவரது மனைவியின் கையில் 72,578 ரூபாய் ரொக்க பணம் உள்ளது. இருவரது பல்வேறு வங்கிக் கணக்குகளில் 27.80 லட்சம் ரூபாய் இருப்புத் தொகையும், ஃபிக்சட் டெபாசிட்டாக 9.80 லட்சம் ரூபாயும் உள்ளது.


இருவருக்கும் சென்ற ஆண்டு 2.84 கோடி ரூபாய் வருமான வந்தது என்று வருமான வரி தாக்கல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.

அமித் ஷாவுக்கு மாநிலங்களவை உறுப்பினராக இருந்ததற்குப் பெற்று வந்த சம்பளம், வாடகை மற்றும் விவசாயம் போன்றவற்றிலிருந்து வருமானம் வந்துள்ளது.

2017-ம் ஆண்டு குஜராத் மாநிலங்களவைத் தேர்தலில் அமித் ஷா போட்டியிட்ட போது 34.31 கோடி என்று குறிப்பிட்டு இருந்தார், அது இப்போது 4.5 கோடி ரூபாய் அதிகரித்துள்ளது.2012-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்குப் போட்டியிட்ட போது அமித் ஷா, அவரது மனைவி மற்றும் மகன் என அனைவருக்கும் சேர்த்து மொத்தமாகவே 11.79 கோடி ரூபாய் சொத்து இருந்ததாகத் தெரிவித்திருந்தார்.

அமித் ஷா மற்றும் அவரது மனைவி இருவருக்கும் சொந்தமாக கார் இல்லை. இளங்கலை பட்டப் படிப்பை இரண்டாம் ஆண்டுக்குப் பிறகு படிக்கவில்லை. மேற்கு வங்கம் மற்றும் பீகாரில் இவர் மீது 4 குற்றவியல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் பார்க்க:ட்
First published: March 31, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading