“ஜெய்ஸ்ரீராம் என பாகிஸ்தானிலா முழங்க முடியும்?” மேற்குவங்க தேர்தல் பிரசாரத்தில் அமித்ஷா கேள்வி

“ஜெய்ஸ்ரீராம் என பாகிஸ்தானிலா முழங்க முடியும்?” மேற்குவங்க தேர்தல் பிரசாரத்தில் அமித்ஷா கேள்வி

அமித் ஷா

மே மாத தேர்தலுக்குப் பிறகு மம்தாபானர்ஜி மேற்குவங்க முதலமைச்சராக இருக்கமாட்டார் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

  • Share this:
    மேற்கு வங்க மாநிலம் கூச்பெஹார் பகுதியில் பிரசாரம் செய்த மத்திய அமைச்சர் அமித்ஷா, மத்திய அரசின் திட்டங்களை மம்தா பானர்ஜி தடுத்து நிறுத்தி, ஏழை மக்களுக்கு எதையும் செய்யவில்லை என்று குற்றம்சாட்டினார்.

    மேற்குவங்கத்தில் பாஜக ஆட்சி அமைந்ததும் பிரதமரின் விவசாயிகள் நிதித்திட்டத்தின்படி விவசாயிகளுக்கு பணம் அளிக்கப்படும் என்றார். பதற்றத்தையும் அச்சமான சூழலையும் மம்தா பானர்ஜியின் அரசு ஏற்படுத்தியிருப்பதாக கூறிய அமித்ஷா, ஜெய் ஸ்ரீராம் என இங்கு முழக்கமிடாமல் பாகிஸ்தானிலா முழங்க முடியும் என்றும் கேள்வி எழுப்பினார்.

    முன்னதாக கொல்கத்தாவில் நேதாஜி பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் மோடி கலந்து கொண்ட நிகழ்ச்சியில் மம்தா பானர்ஜி உரையாற்றிய போது ஜெய் ஸ்ரீராம் என்று கூட்டத்தினர் முழக்கமிட்டதால் அவர் பேச மறுத்துவிட்டார்.

    நோதாஜி சுபாஷ் சந்திரா போஸின் 125-வது பிறந்த நாள் தினத்தன்று கொல்கத்தாவில் நடைபெற்ற பராக்கிராம் திவாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரதமர் மோடி, நேதாஜியை கௌரவப்படுத்தும் விதமாக அஞ்சல் தலைகளை வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் கலந்துகொண்டார்.

    ALSO READ | தொடர்ந்து அதிகரிக்கும் பெட்ரோல், டீசல் விலை!இன்றைய நிலவரம் என்ன?

    இந்த நிகழ்ச்சியின் போது மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி உரையாற்ற மேடைக்கு வந்தார். அப்போது கூட்டத்தில் இருந்தரவர்கள் 'ஜெய் ஸ்ரீராம்', மோடி, மோடி என முழக்கமிட்டனர்.

     

     



     

    இதனால் அதிருப்பதி அடைந்த மம்தா, “இது அரசு நிகழ்ச்சி. அரசியல் நிகழ்ச்சி அல்ல. நிகழ்ச்சிக்கு ஒருவரை அழைத்து விட்டு இதுப்போன்று நடப்பது சரியல்ல. அரசாங்க விழாவில் கண்ணியம் காக்க வேண்டும்“ என்று கூறிவிட்டு விழாவில் பேச மறுத்துவிட்டு சென்றுவிட்டார்.
    Published by:Sankaravadivoo G
    First published: