• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • ப.சிதம்பரம், சிவகுமார் கைது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையா? அமித்ஷா விளக்கம்

ப.சிதம்பரம், சிவகுமார் கைது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையா? அமித்ஷா விளக்கம்

அமித்ஷா

அமித்ஷா

நான், எல்லோரிடமும் ஒன்றை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன், எந்த விசாரணையும் இறுதியானது இல்லை. நீங்கள், அதனை எதிர்த்து வழக்குத் தொடர முடியும். நம்முடைய அரசியலைப்புச் சட்டம் அந்த உரிமையை நமக்கு வழங்கியுள்ளது

  • News18
  • Last Updated :
  • Share this:
    ஊழல் முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட அரசியல் தலைவர்களின் வாதங்களை நீதிமன்றம் ஏற்கவில்லையென்றால் அதனை எப்படி அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக கருத முடியும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

    மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, நியூஸ் 18 குழும ஆசிரியர் ராகுல் ஜோஷிக்கு சிறப்பு நேர்காணல் அளித்தார். அந்த பேட்டியில் பல்வேறு விவகாரங்கள் குறித்து பகிர்ந்து கொண்டார்.

    அதில், எதிர்கட்சித் தலைவர்கள் கைது செய்யப்படுவது குறித்து பேசிய அவர், ‘பெரும்பாலான வழக்குகள் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக் காலத்தில் போடப்பட்டவை. நாங்கள் அதனை விசாரணை செய்கிறோம் மற்றும் அரசியல் பழி வாங்கும் நடவடிக்கை என்று குற்றச்சாட்டப்படுகிறோம். இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்றால், எதற்காக இந்த நடவடிக்கைக்கு ஆறு ஆண்டுகள் ஆகிறது?

    ஒன்றரை வருடங்களில் அவர்களை சிறையில் அடைத்திருக்க முடியாதா? முழுமையான விசாரணை நடைபெற்றுள்ளது. புலனாய்வு அமைப்புகள் அவர்களுடைய பணிகளைச் செய்கின்றனர். இதே ஊடகங்கள்தான் 12 லட்சம் கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றுள்ளது. எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையென்று. பல காங்கிரஸ் தலைவர்கள் நாங்கள் ஊழலில் ஈடுபட்டிருந்தால் எங்கள் மீது வழக்குப் பதிவு செய்யுங்கள் என்று பேசியிருந்தார்கள். புலனாய்வு அமைப்புகள் கைது செய்யச் செல்லும்போது, அவர்கள் நாடகம் நடிக்கின்றனர்.

    சுப்பரமணிய சுவாமி தனிப்பட்ட முறையில் தொடர்ந்த வழக்கில் சோனியா காந்தி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர், தற்போது ஜாமினில் வெளியே இருக்கிறார். அந்த நேரத்தில் எந்த தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருந்தது? தற்போது ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டுள்ளார்.

    தற்போது எந்த தேர்தல் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது? எந்த தேர்தலும் இல்லை. டி.கே.சிவகுமார் கைது செய்யப்பட்டுள்ளார். அங்கேயும் எந்த தேர்தலும் நடைபெறவில்லை. ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, சி.ஏ.ஜி அறிக்கை அல்லது உச்ச நீதிமன்ற உத்தரவுகளின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்தது. அந்த முதல் தகவல் அறிக்கையின் அடிப்படையில் விசாரணை நடைபெறுகிறது. நான், எல்லோரிடமும் ஒன்றை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன், எந்த விசாரணையும் இறுதியானது இல்லை.

    நீங்கள், அதனை எதிர்த்து வழக்குத் தொடர முடியும். நம்முடைய அரசியலைப்புச் சட்டம் அந்த உரிமையை நமக்கு வழங்கியுள்ளது. அவர்கள் நீதிமன்றங்களுக்குச் செல்ல வேண்டும். அவர்கள் நீதிமன்றங்களுக்குச் செல்கிறார்கள். நீதிமன்றம் அவர்களுடைய முறையீட்டை ஏற்க மறுத்தால், பின்னர் அது எப்படி அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக இருக்க முடியும்? ப.சிதம்பரம் மத்திய உள்துறை அமைச்சராக இருந்தபோது, சி.பி.ஐ எனக்கு எதிராக வழக்குப் பதிவு செய்தது. சி.பி.ஐ மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் வராது.

    இன்றும், சி.பி.ஐயும் அமலாக்கத்துறையும் உள்துறை அமைச்சகத்தின் கீழ் வராது. எனக்கு எதிராக சி.பி.ஐ வழக்குப் பதிவு செய்தபோது, நான் உடனே உயர் நீதிமன்றத்தில் முறையிட்டேன். எனக்கு எதிராக வழக்குத் தொடர எந்த முகாந்திரமும் இல்லை என்று ஒரு மாதத்தில் நீதிமன்றம் தெரிவித்தது. நான், சுதந்திரமாக வெளியே வந்தேன். அவர்கள், எனக்கு எதிராக வழக்கை சித்தரித்திருக்கலாம். பின்னர், இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.

    Also see:


    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: