சட்டவிரோதமாக குடியேறிய ஒவ்வொருவரும் வெளியேற்றப்படுவார்கள்! அசாம் விவகாரத்தில் அமித்ஷா பிடிவாதம்

தேசிய குடிமக்கள் பதிவைக் கண்டு அனைத்து மாநிலங்களும் அச்சப்படுகின்றன. தேசிய குடிமக்கள் பதிவு தவறானது என்று அசாம் மக்கள் நினைக்கின்றனர்.

சட்டவிரோதமாக குடியேறிய ஒவ்வொருவரும் வெளியேற்றப்படுவார்கள்! அசாம் விவகாரத்தில் அமித்ஷா பிடிவாதம்
அமித் ஷா
  • News18
  • Last Updated: September 9, 2019, 3:06 PM IST
  • Share this:
சட்டவிரோதமாக குடியேறியுள்ள ஒவ்வொருவரும் நாட்டிலிருந்து வெளியேற்றப்படுவார்கள் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

அசாம் மாநிலத்தில் சட்டவிரோதமாக குடியேறிவர்களை வெளியேற்றுவதற்கு தேசிய குடிமக்கள் பதிவு(The National Register of Citizens) மூலம் கணக்கெடுக்கும் பணி நடைபெற்றுவருகிறது. இந்த என்.ஆர்.சிக்கான வரைவுப் பட்டியல் ஆகஸ்ட் 31-ம் தேதி வெளியிடப்பட்டது.

அதில், சுமார் 19 லட்சம் பேரின் பெயர் பட்டியல் விடுபட்டுள்ளது. இந்த விவகாரம் தேசிய அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. இந்தநிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, வடகிழக்கு மாநிலங்களில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார்.


அப்போது பேசிய அவர், ‘தேசிய குடிமக்கள் பதிவைக் கண்டு அனைத்து மாநிலங்களும் அச்சப்படுகின்றன. தேசிய குடிமக்கள் பதிவு தவறானது என்று அசாம் மக்கள் நினைக்கின்றனர். அசாமில் மட்டுமல்ல, நாடு முழுவதும் சட்டவிரோதமாக குடியேறிவர்கள் வெளியேற்றபடுவார்கள் என்று நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன்.

என்.ஆர்.சி பழங்குடியினர் சட்டத்துக்கு எதிராக இருக்காது என்று நான் உறுதியளிக்கிறேன். வங்கதேசம், பாகிஸ்தான், ஆஃப்கானிஸ்தானிலிருந்து இந்தியாவுக்கு தஞ்சம் புகுந்த சிறுபான்மையினருக்கு அவர்களிடம் உரிய ஆவணங்கள் இல்லையென்றாலும் குடியுரிமை அளிப்பதற்கு மத்திய அரசு முடிவுசெய்துள்ளது. இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக குடியேறியுள்ள ஒவ்வொருவரும் நாட்டிலிருந்து வெளியேற்றப்படுவார்கள்’ என்று தெரிவித்தார்.

Also see:
First published: September 9, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்