• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • முஸ்லிம் அல்லாத குடியேறிகள் இந்தியாவிலிருந்து வெளியேற்றப்பட மாட்டார்கள் - அமித்ஷா உறுதி

முஸ்லிம் அல்லாத குடியேறிகள் இந்தியாவிலிருந்து வெளியேற்றப்பட மாட்டார்கள் - அமித்ஷா உறுதி

உள்துறை அமைச்சர் அமித்ஷா

உள்துறை அமைச்சர் அமித்ஷா

மம்தா பானர்ஜி எதிர்கட்சியாக இருந்தபோது இந்தியாவுக்குள் ஊடுருவியுள்ளவர்கள் வெளியேற்றப்படவேண்டும் என்று அவர் பேசியுள்ளார் என்பது உங்களுக்குத் தெரியும்.

  • News18
  • Last Updated :
  • Share this:
    முஸ்லீம் அல்லாத குடியேறிகள் இந்தியாவிலிருந்து வெளியேற்றப்படமாட்டார்கள் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

    மக்களவைத் தேர்தலுக்கு பிறகு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா முதன்முறையாக மேற்கு வங்க மாநிலத்துக்குச் சென்றுள்ளார்.

    மேற்கு வங்கத்தில் பேசிய அமித்ஷா, ‘தேசிய குடிமக்கள் பதிவை மேற்கு வங்கத்தில் அமல்படுத்த மாட்டோம் என்று மம்தா பானர்ஜி கூறிவருகிறார். ஆனால், நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன் இந்தியாவுக்குள் ஊடுருவியுள்ள ஒவ்வொரு வெளிநாட்டவரும் வெளியேற்றப்படுவார்கள்.

    கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியின்போது, மம்தா பானர்ஜி எதிர்கட்சியாக இருந்தபோது இந்தியாவுக்குள் ஊடுருவியுள்ளவர்கள் வெளியேற்றப்படவேண்டும் என்று அவர் பேசியுள்ளார் என்பது உங்களுக்குத் தெரியும்.

    இந்து, சீக்கியம், ஜெயின், புத்தம், கிறிஸ்தவத்தைச் சேர்ந்த சட்ட விரோத குடியேறிகள் நாட்டிலிருந்து வெளியேற்றப்பட மாட்டார்கள் என்று உறுதியளிக்கிறேன். நீங்கள் மத்திய அரசால் வெளியேற்றப்படமாட்டார்கள். வதந்திகளை நம்பாதீர்கள். என்.ஆர்.சியை அமல்படுத்துவதற்கு முன், குடிமக்கள் சட்டத்தை நாங்கள் கொண்டுவருவோம். அந்தச் சட்டம் நீங்கள் (முஸ்லிம் அல்லாதவர்கள்) குடியுரிமை பெறுவதை உறுதி செய்யும்’ என்று தெரிவித்தார்.

    Also see:

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: